Rste

போர்க்குற்ற விசாரணை அழுத்தங்கள் தமிழ் மக்களின் விடிவிற்கா? பொன்சேகாவின் விடுதலைக்கா? – இதயச்சந்திரன்

sri-lanka-war crimes

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானமொன்று கொண்டுவரப்படுமென மத்திய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசு எத்தகைய உறுதி மொழிகளை வழங்கினாலும், தீர்மானம் முன்வைக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு நடாத்திய பேச்சுவார்த்தையில், றொபேர்ட் பிளேக்கும், மரியா ஒட்ரோவும் கூறிய விடயத்தில், கூட்டமைப்பின் கருத்தினைக்கூட அவர்கள் இருவரும் பரிசீலிக்க விரும்பவில்லையென்பது தெளிவாகிறது. கூட்டமைப்போடு இது குறித்துப் பேசிப்பயனில்லை [...]

எதுவரை சென்றோம்….. எங்கு நிற்கின்றோம்….. ச.ச.முத்து

Mullivaikkal_killing_field

இன்று:- முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டில் நிற்கின்றோம். இதுவரை உலகில் சொல்லப்பட்டதும் அகராதிக்குள் இருப்பவையுமான வார்த்தைகள் எதனாலும் முள்ளிவாய்க்கால் தரும் வெறுமையையும், திகைப்பையும் பெரும்சோகத்தையும் கூறிவிடமுடியாது. எத்தனை காலமானாலும் அணைக்க முடியாத தீயை எம் வாழ்வினுள் வீசி எறிந்து போய் இருக்கிறது முள்ளிவாய்க்கால். இனம் ஒன்றின் நம்பிக்கைக் கூறுகள் கொலு கொலுத்து தகர்ந்தநாள் அது. சின்னஞ்சிறு குழந்தைகளையும், தள்ளாத வயதினரையும், உயிருக்காக ஓடிஓடி பதுங்கு குழிகளுக்குள் புகுந்த மக்களையும் கொன்று குவித்து அதன் மீது ஏறிநின்று இந்த சிங்களம் [...]

நான் சாட்சி – சனல்4க்கு ஆதாரம் வழங்கியவர்!

தமிழீழத்தில் ஆவணங்களை வெளிக்கொண்டுவந்த வாகீசனுடன் பாஷண அபேயவர்த்தன

இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள் அமைப்பின் உருவாக்குநர்களில் ஒருவரான பாஷண அபேயவர்த்தன, “இலங்கையில் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” ஆவணப்படத்துக்கு வலுவான ஆதாரங்களை வழங்கிய ஒருவராக கருதப்படுகிறார். அதனால் நேர்ந்த அச்சுறுத்தலினால் தற்போது அஞ்ஞாதவாசம் இருக்கும் அவர், தமிழக இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இருந்து ஒரு சிறு பகுதி இங்கு பிரசுரமாகிறது. மே 2009 இல் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான உங்களது எதிர்வினை என்ன? அப்பொழுது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? இப்போது போலவே போரின் கடைசிக் காலங்களில் நான் தலைமறைவாகவே [...]

தமிழீழத் தமிழரின் பேரழிவின் மூன்றாம் ஆண்டில் உலகத் தமிழர்கள் – அனலை நிதிஸ் ச. குமாரன்

mullivaikal-uk-2012-1

முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் சந்தித்த பேரவலத்தை நினைவுகூரும் மாதத்தில் உலகத் தமிழர்கள் பல்வேறு விதமான நினைவேந்தல் நிகழ்வுகளை தாம் வதியும் நாடுகளில் நடத்த ஒழுங்குகளை செய்து வருகிறார்கள். கொத்துக் கொத்தாக பல்லாயிரம் மக்களை பலியெடுத்தது சிங்களம். அப்பாவிகளை அழித்த அரக்கர்கள் இன்று உலக அரங்கில் உலாவிவருகிறார்கள். நீதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகள் மந்தகதியிலேயே நடைபெறுகிறது. அடிக்காமல் அடித்ததாக பொய்ப் புகார்களை கொடுத்தாலே அப்பாவிகளை கைது செய்து தண்டிக்கும் மேற்குலகத்தின் சட்டம், பல்லாயிரம் மக்களை அழித்ததை செய்மதி ஊடாக [...]

யார் இந்த மாவோ போராளிகள்? எதற்கு இந்த போராட்டம் ? இவர்களுக்கு என்ன பலம் இருக்கிறது?

mavoiste

“மண்ணை குடைந்து வெட்டி எடுக்கும் தங்கம் யாருக்கு? மலையை குடைந்து வெட்டி எடுக்கும் தாது யாருக்கு? இந்த மண்ணோடு வாழ்வோம்! மண் இல்லை என்றால் சாவோம்! ” – ” பச்சை வேட்டை” பாடல் இரண்டு வருடம் முன், மத்திய அரசு கூறியது: “நீங்கள் ஒரு நாள் ஆயுதங்களை கீழே போட்டால், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்” , அதற்கு மாவோயிஸ்டுகள் கூறிய பதில் : “நாங்கள் ஒரு வாரம் ஆயுதங்களை கீழே போட தயார்; நீங்கள் ஒரு [...]

அரசியல் தீர்வுத் திட்டம் என்ன?முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்துக-இதயச்சந்திரன்

111201170809_sampanthar_tna_304x171_bbc_nocredit

யாழ். மே தினக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி பிடித்த விவகாரம், தென்னிலங்கையில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதைத் தெரிந்துதான் செய்தேன் என்று அடம்பிடிப்பதால் சிங்களத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. கொடி பிடித்து நல்லிணக்கத்தை உருவாக்கலாமென்று சம்பந்தன் கற்பிதம் கொண்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரர் விடுவதாக இல்லை.வட கிழக்கு தமிழர் தாயகம் என்பது புனைக்கதை, பௌத்த கோவில்களை இடித்தே, திருக்கோணேஸ்வரமும் திருக்கேதீஸ்வரமும் கட்டப்பட்டதென தேரர் புது விளக்கம் தருகின்றார்.திருமலை பத்திரகாளி அம்மனின் வாகனம் சிங்கம் என்பதால், பௌத்த கோவிலை [...]

இந்தியாவும் ஈழமும்! -படியுங்கள், பரப்புங்கள் – கே.எஸ்.இராதாகிருஷ்ணன்,

india-tamileelam-rste.org

ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர். லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு [...]

பேச்சளவில் மட்டும் இருந்துவிடல் ஆகாது – அனலை நிதிஸ் ச. குமாரன்

Karunanidhi-resurrecting-TESO

தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் ஏப்ரல் 30-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ரெசோ கூட்டத்தில் கி.வீரமணி, பேராசிரியர் க. அன்பழகன், சுப. வீரபாண்டியன், கவிஞர் கலி.பூங்குன்றன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தனித் தமிழீழம் விரைவில் அமைந்திட ஐ.நா. சபை, தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொது வாக்கெடுப்பினை விரைவிலே நடத்திட வேண்டுமென்றும் அதற்கு இந்தியா எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மே 1985-இல் கருணாநிதி, வீரமணி மற்றும் பழ நெடுமாறன் இணைந்து [...]

மேதின நிகழ்வும் மேற்குலகின் புதிய நகர்வும்-இதயச்சந்திரன்

May-01-UNP-Jaffna

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் தலைமையில் மே தினக் கூட்டம் நடைபெறுவதாக முதலில் செய்தி வந்தது. அரச ஒடுக்குமுறைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதன் அடிப்படையில், ஐக்கிய தேசியக் கட்சி, நவசமசமாஜக் கட்சி, மனோ கணேசனின் ஜனநாயக தேசிய முன்னணி போன்றவை கலந்து கொள்வதாக கூட்டமைப்பு தெரிவித்தது. ஆனால் வெளிவந்த கானொளிகளைப் பார்க்கும் போது, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையில் ஏனைய கட்சிகள் இணைந்தது போன்றதான தோற்றப்பாட்டை அந்நிகழ்வு உருவாக்கியுள்ளது போல் தெரிகிறது. கூட்டமைப்போடு சேர்ந்து மேதின நிகழ்வினை நடத்துவதால் [...]

ஏந்தும் சிங்ககொடியும் மறுக்கின்ற சுயநிர்ணயமும் – ச.ச.முத்து

May-Day-Sampanthan-Ranil

தேசிய நல்லிணக்கத்துக்கு சிங்கள தேசத்துக்கு இதைவிட வேறு ஏதும் சின்னமோ புகைப்படமோ தேவையில்லை. என்ன மாதிரியாக ஒரு வாஞ்சையுடன் அந்த கொடியை ஏந்தியபடி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதின நிகழ்வு மேடையில் ஆட்டிக்காட்டுகிறார். இந்த சிங்கக் கொடியை நந்திக் கடலின் ஓரத்தில் நீண்ட கம்பத்தில் எந்தவொரு இடைஞ்சல்களுமின்றி பறக்கவிடுவதற்காக சிங்களப்படைகளால் கொல்லப்பட்ட லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் இறுதிநேர கதறல்கள் இந்த மேதின ஆட்டத்தில் சம்பந்தனின் காதில் விழாமலேயே போயிருக்கும். இந்த சிங்கக்கொடியின் கீழேதான் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் [...]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

May 2012
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Photo Gallery

Plugin from the creators of Brindes Personalizados :: More at Plulz Wordpress Plugins