Rste

நாளை ஐ.நா.மனித உரிமை மாநாடு தொடக்கம் , இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறும் நிலை

ஜெனீவாவில் நாளை நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 19ஆவது கூட்டம் இலங்கையின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.இலங்கை இறுதிப் போரில் பல லட்சம் தமிழர்களை இலங்கை ராணுவம் ஈவிரக்கமின்றி படுகொலை செய்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் குழு, ஈழப் போரின் இறுதிக் கட்டத்தின்போது பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதை வெளிப்படுத்தியிருந்தது. மேலும், தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான பரிந்துரைகளையும் வழங்கியிருந்தது.

இதையடுத்து உலக அளவில் இலங்கைக்கு எதிராக கண்டனங்கள் வெடித்தன. ஆனால் இதனைப் பற்றி இலங்கை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. பின்னர் சர்வதேச நாடுகளின் கடுமையான நெருக்கடியினால் இலங்கை அரசாங்கமே ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. அந்தக் குழுவும் சில பரிந்துரைகளை அளித்தது. இதனைப் பற்றியும் ராஜபக்ச அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரம் சர்வதேச ரீதியாக பெரும் விவாதத்துக்குள்ளானது.

இலங்கை அரசு நடத்திய விசாரணைக் குழுவின் பரிந்துரைகளையாவது நிறைவேற்றுமாறும் எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள் என்பதை தெரியப்படுத்துமாறும் அமெரிக்கா அண்மையில் வலியுறுத்தியது. இலங்கை அரசு இநத நடவடிக்கையை மேற்கொள்ளாமல் போனால் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட உத்தேசித்துள்ள தீர்மானத்தை ஆதரிப்போம் என்றும் கூட அமெரிக்கா எச்சரித்தது.

இதேபோல் ஐ.நா. குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றியாக வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றமும் நெருக்கடி கொடுத்தது. ஆனால் மகிந்த உலக சமுதாயத்தை சீன முகமூடி அணிந்து பார்த்து வரும் ராஜபக்சே எதையும் கண்டுகொள்ளவில்லை.

இதனால் நாளைய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.


இத்தீர்மானத்தை அமெரிக்கா, கனடா நாடுகளோடு தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடு ஒன்றோ கொண்டுவரக்கூடும் எனத் தெரிகிறது. அல்லது கூட்டாக இத்தீர்மானத்தை சில நாடுகள் முன்வைக்கக் கூடும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 24 நாடுகளின் ஆதரவு இருப்பின் தீர்மானம் நிறைவேறிவிடும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள தீர்மானம் நிறைவேறுவதற்கான சாத்தியங்களே அதிகம் இருக்கிறது.


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த இந்திய வெளியுறவுச் செயலருடன் அமெரிக்க அதிகாரிகள் இது தொடர்பாக விவாதித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் இலங்கையை விட்டுக் கொடுக்க முடியாவிட்டாலும் அமெரிக்காவின் நிர்பந்தத்துக்காக இந்தியா தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவளிக்கலாம்.

இலங்கைக்கு எதிரான ஐ.நா. சபையின் நடவடிக்கைகளில் இந்தியா தெளிவான நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்பது தமிழ்நாட்டு அரசியல்தலைவர்களின் கோரிக்கை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் தமக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவதைத் தடுப்பது தொடர்பாக இலங்கை அரசு செய்த தகிடுதத்தங்கள் ஏராளம். ஜெனீவா சென்றுள்ள இலங்கை அமைச்சர் பீரீஸ், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்து சமாதானப்படுத்த முயற்சித்துப் பார்த்தார். ஆனால் நவநீதம் பிள்ளையோ, உங்கள் நாட்டு விசாரணைக் குழு கொடுத்த பரிந்துரைகளைக் கூட நிறைவேற்றாதது ஏன்? என்று முகத்தில் அறைந்தாற்போல் கேட்க பீரீஸ் முகம் வெளுத்துப் போனதாம்.

மேலும் பீரிஸுடன் சென்ற மற்றொரு சென்ற அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நவநீதம்பிள்ளையுடன் கடும்வாக்குவாதத்தில் ஈடுபட அதற்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் ஜெனீவா கூட்டத்தின் முடிவை சர்வதேச சமூகம் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

February 2012
M T W T F S S
« Jan   Mar »
 12345
6789101112
13141516171819
20212223242526
272829  

Photo Gallery

Plugin from the creators of Brindes Personalizados :: More at Plulz Wordpress Plugins