
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியரான தமிழ் யுவதி ஒருவரை கருணா குழுவினர் கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் படுகொலை செய்து உள்ளார்கள் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்து இருக்கின்றனர். தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விபரங்கள் தமிழ். சி. என். என் இற்கு விக்கிலீக்ஸ் மூலம் கிடைத்து [...]

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு மனித உரிமைகள் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான உலகப் புகழ்பெற்ற நிறுவனமான த எல்டர்ஸ் (the el-Ders) அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்துவ நாடுகளிடம் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இதற்கமைய மேற்படி அமைப்பு ஜெனிவாக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாடுகளின் தூதுவர்களுக்கு முக்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதியும், ஜனநாயக விடுதலைப் [...]

உலகத் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையார் சிரியப் படைகளின் எறிகணை வீச்சில் பலியாகியுள்ளார். பிரித்தானிய சண்டே ரைமஸ் வார இதழின் பத்தி எழுத்தாளரும், செய்தியாளருமான மேரி கொல்வின் அம்மையார், சிரிய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோம்ஸ் நகரில் தங்கியிருந்த பொழுது அவரது வீட்டின் மீது அரச படைகளின் பத்துக்கும் அதிகமான எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் உயிரிழந்துள்ளார். இதன்பொழுது அதே வீட்டில் தங்கியிருந்த பிறிதொரு ஊடகவியலாளரான பிரெஞ்சு நிழற்படவியலாளர் ரெமி ஒச்லிக் அவர்களும் பலியாகியுள்ளார். [...]

ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் 5ஆம் திகதி ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் 17வது நாளாகவும் தொடர்கின்றது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றம் தொடர்பான சுயாதீன விசாரணையை சர்வதேச சமூகம் ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டில் உள்ள உறவுகள் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர். தமிழர்களுக்கு நீதிகேட்டு தமிழக உறவுகள் குறிப்பாக அரசியல் தலைவர்களான வைகோ, நெடுமாறன், சீமான் ஆகியோர் உட்பட பலரும் உணர்வெழுச்சியுடன் கையெழுத்து அஞ்சல் அட்டைகளை ஏற்பாடு [...]