
கூடங்குள அணுமின் நிலையத்தை திறக்க காங்கிரசு அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கையே கடைப்பிட்த்து வருகிறது.இந்நிலையில் மீண்டும் கூடங்குள அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் ஆரம்பாகவுள்ளது.இப்போராட்டம் பிப்ரவரி-2 ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மத்தியக் குழுவைச் சந்தித்து நாளை ஒரு மனுவை அளிக்க முடிவு செய்துள்ளோம். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2 முதல் புதிய போராட்டங்கள் மேற்கொள்ளப்படும். பிப்ரவரி 2 முதல் 8 வரை ராமநாதபுரத்தில் அணு உலை எதிர்ப்பு [...]

1984 ஆம் ஆண்டு, பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்த விஷவாயு விபத்துக்குக் காரணமான, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் உரிமையாளர்களான டோ கெமிகல் நிறுவனத்தாருக்கு, லண்டனில் நடைபெற இருக்கின்ற ஒலிம்பிக் பந்தயங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு இருப்பதைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விழைகிறேன். இது தொடர்பாக, 2011 டிசம்பர் 7 ஆம் நாள் நான் தங்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில், இந்த ப்பிரச்சினையை, இங்கிலாந்து அரசாங்கம், ஒலிம்பிக் பந்தய அமைப்புக் குழுவினரின் கவனத்துக்கு, இந்திய அரசு கொண்டு செல்ல வேண்டுமெனக் [...]

முஸ்லீம்கள் குறித்து தவறான எண்ணப்போக்கை தூண்டும் விதமாக கட்டுரை எழுதிய வழக்கில், இனிமேல் அதுபோல எழுத மாட்டேன் என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தைக் கொடுத்ததால் அவருக்கு இன்று முன்பிணை வழங்கியுள்ளது நீதிமன்றம். இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு துவேஷக் கருத்துக்களுடன் கூடிய கட்டுரையை எழுதியதால் சாமி மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.இதையடுத்து அவர் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார். அங்கு இன்று அவருக்கு [...]

ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்படுத்த தன்னார்வ நிறுவனங்களும் சில அரசியல் கட்சிகளும் சதி செய்வதாக இலங்கை அரசு புலம்பல் வெளியிட்டுள்ளது. இதற்கு சில இலங்கை ஊடகவியலாளர்களும் உடந்தையாக இருப்பதாக இலங்கை அரசு கூறியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தையொட்டி இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் போராட்டங்கள் எதிர்வரும் வாரங்களில் வடக்கு மற்றும் [...]

நாம்தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் கூட்டமும் [...]

தமிழக அரசின் மருத்துவப் பணிகளில் தனியார் கல்லூரிகளில் படித்துத் தேர்ந்த செவிலியர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்து வரும் மாணவியரின் போராட்டம் நியாயமானதே. தமிழ்நாட்டில் ஏழை, எளிய குடும்பங்களில் இருந்து வரும் மகளிரே அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்களின் பிள்ளைகள். ஆனால் தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்துவரும் மாணவிகளில் பெரும்பாலோர் மற்ற [...]

இந்து’ ராம் மீதான நிலஅபகரிப்பு புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி. பழனிச்சாமியை திங்கள்கிழமையன்று நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அழைத்துள்ளது. ராம் மீது, போலீஸ் டி.ஜி.பி.யிடமும், சென்னை போலீஸ் கமிஷனரிடமும் 6 புகார் மனுக்களை பழனிச்சாமி கொடுத்திருந்தார். கோவையில் செயல்படும் சேரன் குரூப் கம்பெனிகளின் இயக்குநராகவும் உள்ள பழனிச்சாமி திருச்செங்கோடு தொகுதி எம்.பி.யாகவும், காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றியவர். புகார் என்ன? சென்னை கிழக்கு கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம் அருகே சுமார் [...]

கிளிநொச்சியில் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி என்ற போர்வையில், தமிழ் மாணவர்களின் கல்வியை சிதைக்கும் செயற்பாட்டை படைத்தரப்பு மேற்கொண்டு வருகிறது, படித்த அறிவுள்ள சமுதாயத்தை உருவாக்க நடத்தப்படும், இராணுவச் சிப்பாயையும், காதலித்து அவருடன் ஓடிய பெண்ணையும் விருந்தினர்களாக அழைத்து மாணவர்கள் அவர்களை கௌரவிக்க வேண்டும் என படையினர் நிர்ப்பந்திப்பது, அநாகரிகமான செயல். இதனை தட்டிக் கேட்டால், வேலை பறிபோகும், அச்சுறுத்தப்படுவோம் என்பதனாலேயே பல கல்வி அதிகாரிகள் அங்கு நடந்து கொண்டிருக்கும் அநியாயங்களை பார்த்தும் பார்க்காதவர்கள் போல் நடந்து கொண்டிருப்பதாக [...]

சர்வரோக நிவாரணி போல, சமீபமாக பல பிரச்சினைகளுக்கு இந்திய அரசின் பிராண்ட் அம்பாசிடர் போல ஆகிவிட்டார், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். திடீரென, கடந்த வாரம் இலங்கை சென்றவர், இருதரப்பு மீன்பிடிப்பு தொடர்பாக ஒரு தீர்வைச் சொல்ல… பிரச்சினை பற்றிக் கொண்டுள்ளது. இந்திய, இலங்கை நாடுகளின் மொத்தக் கடல் பரப்பும் இருநாட்டு மீனவர்களுக்கும் பொதுவானது. இதில், வாரத்துக்கு மூன்று நாட்கள் இந்திய மீனவர்களும் மற்ற மூன்று நாட்களில் இலங்கை மீனவர்களும் மீன் பிடிக்கலாம். ஒருநாள் பொதுஓய்வு [...]

சைக்கிள்கள் டோக்கன்களாக உருமாறிய கதையை, இந்திய வெளிநாட்டமைச்சர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது பார்த்தோம்.பொலிஸ், காணி, நிதி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உட்பட்ட பல முக்கிய விடயங்களை நாமே நிர்வகிக்கக் கூடிய தீர்வையே எதிர்பார்க்கின்றோமென கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறும்போது, “செனட் சபை’ என்கிற டோக்கனை காட்டுகிறது அரசு. இந்த டோக்கன் விளையாட்டு, மாவட்ட அபிவிருத்திச் சபையிலிருந்து ஆரம்பமாகிறது.தங்கத்திற்கு மாற்றீடாக டொலர் தாள்களை அச்சடித்து, உலக வளங்களை தனதாக்கி, பெரும் வல்லரசான அமெரிக்காவின் வரலாறுதான் நினைவிற்கு [...]