Rste

கூடன்குள போராட்டக்குழு மீது தாக்குதல் : வைகோ,கொளத்தூர் மணி உள்ளிட்ட பலத் தலைவர்கள் கடும் கண்டனம்

vaiko

கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீதான தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், “சுற்றுச்சூழலுக்கும், மக்கள் உயிருக்கும் பேரபாயம் விளைவிக்கக்கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தொடங்கக் கூடாது என்று, 100 நாள்களுக்கும் மேலாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கூடங்குளத்திலும், கடற்கரையோர கிராமங்களிலும் வாழுகின்ற இலட்சக்கணக்கான மக்களின் அச்சத்தையும், கவலையையும் கருதி, அணுமின்  நிலையம் தொடங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தமிழக [...]

போர்க் குற்றத்திலிருந்து இராசபக்சேயை காப்பாற்ற இந்தியா நடத்தும் நாடகம்

india srilanka

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைக்குச் சென்று போர்க் குற்றவாளி ராஜபக்சேயுடன் பொங்கல் விழா கொண்டாடி, தமிழர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை, திட்டங்களை அறிவித்துள்ளார். போரில் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கு நிதி வழங்கி, ரயில்வே திட்டங்களையும் தொடங்கி வைததுள்ளார். இனப்படுகொலையாளரான ராஜபக்சே மிகச் சிறந்த பண்பாளர் என்றும், தம்முடன் விருந்து உண்பதற்காகவே பல மணி நேரம் காத்திருந்ததாகவும் புகழாரம் சூட்டியிருக்கிறார். எஸ்.எம். கிருஷ்ணாவின் பயணத்தினால் தமிழர்கள் பிரச்னை தீர்ந்து விட்டதாகவும், இனி தமிழக மீனவர்கள் படுகொலை நிறுத்தப்பட்டு விடும் [...]

கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல்

koodankulam

திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களைத் தாக்கிய இந்து முன்னணியைச் சேர்ந்த 10 பேர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை தொடர்பாக மத்திய – மாநில குழுக்களின் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று முற்பகல் தொடங்க இருந்தது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக திறக்கக் கோரி, மத்திய நிபுணர் குழுவினரிடம் மனு அளிப்பதற்காக, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், [...]

அமெரிக்காவால் இலங்கை போன்ற சிறுநாடுகள் பாதிக்கப்படுகிறதாம் – வேதனைப்படுகிறாராம் ராசபக்சே

rajapakse-cartoon

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் இலங்கை போன்ற சிறிய நாடுகள் பாதிக்கப்படுவதாக  குற்றம்சாட்டியுள்ளார்,ராசபக்சே. கொழும்பில் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த மகிந்தா, எண்ணைய் வளத்தில் ஈரானை மட்டுமே இலங்கை சார்ந்திருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். இலங்கையின் எண்ணைய் தேவையில் 93 சதவீதத்தை ஈரானே வழங்குவதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். ஈரானுக்கு எதிரான நடவடிக்கை மூலமாக அந்நாட்டை மட்டும் அமெரிக்கா மற்றும் மேற்குல நாடுகள் தண்டிக்கவில்லை. எங்களைப் போன்ற சிறிய [...]

 இன்னும் 45 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் காங்கிரசு ஆட்சிக்கே வர முடியாது…காங்கிரசுக்குள்ளே புகைச்சல் !

manishankar aiyar

தமிழ்நாட்டில் காங்கிரசு தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. இது நீடித்தால் இன்னும் 45 வருடங்களுக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த சோனியா காந்தி குறித்த நூலின் தமிழ் மொழி பெயர்ப்பின் வெளியீடு நடந்தது. இதில் கலந்து கொண்டு அய்யர் பேசுகையில், தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. 1967-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் [...]

இலங்கை போர்க்குற்றங்களை உலகிற்கு எடுத்துக்காட்டியவர்களுக்கு நோபல் பரிசு ! – ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

tamils_obama_001

இலங்கை அரசின் கொடுமையான போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதுடன், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை இனங்காட்டிய தனிநபர்களையும், அமைப்புகளையும் நினைவுபடுத்தி நோபல் பரிசு வழங்கும் குழுவிற்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். மனிதாபிமானத்துடன் செயற்பட்ட இவர்கள் சிங்கள இனவாதத்தினால் ஏற்பட்ட கொடுந்துயரத்திலிருந்து தமிழ் மக்களை ஆறுதல்படுத்தியவர்கள். இந்த இனப்படுகொலைகளை செய்தவர்களையும், இவற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் வெளியுலகிற்கு இனங்காட்டியவர்களும் இவர்களே. இப்பரிசினை பெற இவர்கள் தகுதியுடையவர்கள் என நோபல் பரிசு வழங்கும் குழுவிற்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பரிந்துரைத்துள்ளது. மேலும், ஒவ்வொரு [...]

அமெரிக்காவின் தலையீடால் இலங்கை போர்க்குற்ற அறிக்கை மனித உரிமை கூட்டமைப்பில் விவாதிக்கப்படலாம்

un_tharusman_001

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டமைப்பு அமர்வுகளில், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா நிபுணர் குழு அறிக்கை விவாதிக்கப்படும் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதனை ஆதரித்துள்ளன. இதனை தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை கூட்டமைப்பு அமர்வுகளில் நிபுணர் அறிக்கை தொடர்பில் விவாதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தருணத்தில் மனித உரிமை கூட்டமைப்பு அமர்வுகளில் கற்றுக் [...]

மூத்த போராளி கேணல் கிட்டுவின் நினைவாக மெல்பேர்னில் தமிழர் விளையாட்டு விழா !

kiddu_melborn_001

வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 19ஆவது ஆண்டு நினைவாக ”தமிழர் விளையாட்டு விழா” அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.நேற்று முன்தினம் காலை 9 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை வொன்ரோனாவில் ஜேடபிள்யு மான்சன் றிசேவ் (J.W. Manson Reserve, Wantirna) மைதானத்தில் இந்நிகழ்வுகள் நடைபெற்றது. கேணல் கிட்டு தமிழீழத்தின்  விடுதலைக்காக புறப்பட்ட நாளிலிருந்து வீரச்சாவடைந்த 1993 வரை தாயகத்தின் பரப்பு எங்கும், அதன்பின்னர் தமிழகத்திலும் இந்தியாவிலும், அதற்குப்பின்னர் பிரித்தானியாவிலும், அங்கிருந்து [...]

திருகோணமலை மாணவர்களை சுட்டுக்கொன்றது இலங்கை விசேட படையே – விக்கிலீக்ஸ்

triconamalai students

திருகோணமலை கடற்கரையில் வைத்து 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஐந்து மாணவர்களை விசேட அதிரடிப்படையினரே படுகொலை செய்ததாக, தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கிற்கும், அப்போதைய ஜனாதிபதியின் ஆலோசகரான பசில் ராசபக்சேவிற்கும் இடையில் ந்டந்த சந்திப்பின் அடிப்படையில் இந்தக் குறிப்பு [...]

சிங்கள அரசின் சுதந்திர தினத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

PROTEST-AGAINST-SRILANKA

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

January 2012
M T W T F S S
« Dec   Feb »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Photo Gallery