Rste

ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தும் 2012 ஆம் ஆண்டு   -இதயச்சந்திரன்

2012

இன்று 2012  இல் காலடி வைக்கிறது உலகம். கடந்த ஆண்டு நிகழ்வுகளை  மீட்டிப் பார்த்தால், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, மனித உரிமைப் பேரவைக் கூட்டங்களும், தீர்வில்லாப் பேச்சுவார்த்தைகளுமே நினைவிற்கு வருகின்றது. நீண்ட போரினால்  பாதிப்புற்ற மக்களின்  இயல்பு வாழ்வு திரும்பி விட்டதாவென்கிற  கேள்விக்கு இதுவரை  பதில் இல்லை. மண் சுமந்த மேனியர், நிலமில்லாமல் அலைகின்றார். 54 ஏக்கர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்ணும், பாதுகாப்பு  அமைச்சிற்கு தாரை வார்க்கப்படுகின்றது.தமிழர் நிலங்களில் இராணுவம் குடி கொண்டால் தேசிய [...]

8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும் போது புலம்பெயர் தமிழ் மக்களை நான் மேய்க்க முடியாதா என்ன ?

selvy-gtv

சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கிவரும் GTV மக்களிடம் பெறப்படும் நன்கொடை தொடர்பான காசுக் கணக்கை வெளியிடாமல் இருப்பது தொடர்பாக பல விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே GTV யின் ஏகபோக உரிமையாளர் திரு செல்வி அவர்கள் 8ம் வகுப்பு படித்த பிரபாகரன் புலிகளை மேய்க்கும்போது அக்கவுன்டனாக(கணக்காளர்) இருக்கும் எனக்கு புலம்பெயர் தமிழர்களை மேய்க்க முடியாதா எனக் கேட்டுள்ளதாக அவருடன் ஒரு காலத்தில் நெருங்கிப் பழகிய வெங்கடேஷ் என்பவர் தெரிவித்துள்ளார். வெங்கடேஷ் அல்லது சிவம் என்று அழைக்கப்படும் [...]

யாழ். மாணவர்கள் இருவர் முதலாம் இரண்டாமிடங்களை தேசிய ரீதியில் பெற்று சாதனை

YARL-STUDENTS-FIRST-PLACE

2011 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சையில் கணிதத்துறையிலும், விஞ்ஞானத் துறையிலும் யாழ். மாணவர்கள் இருவர் முதலாம் இரண்டாமிடங்களை தேசிய ரீதியில் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேசிய ரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, உயிரியல் விஞ்ஞானம், கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த பிரமித் ஷசிந்த ருவனோத்திரன முதலாமிடத்தையும், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆனந்தராஜா சஞ்ஜயன் இரண்டாம் இடத்தையும் முஸ்லிம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த [...]

2012  முதலாம் திகதி முதல் நேரடி கருத்துக்களம் அறிமுகம்  செய்கின்றோம்!

karuthukalam

அன்பான எம் தமிழ் உறவுகளே வணக்கம் 2012 முதலாம் திகதி முதல் எமது இணையத்தில் கருத்துக்களம் வெளியிட உள்ளோம் என்பதை மகிழ்வோடு தெரிவிக்கின்றோம். அதன் ஊடாக பல நாடுளில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு விவாதிக்கலாம் புதிதாக நண்பர்கள் வட்டத்தை உருவாக்கலாம். பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் உள்ள உங்கள் நண்பர்களை நேரடியாக இணைத்து உரையாடலாம். பல கருத்துக்களை நேரடியாக விவாதிக்கலாம். உங்கள் விவாதங்கள் ஆரோக்கியமானதாக இருத்தல் அவசியம் என்பதையும் தெரிவிக்கின்றோம், பல விளையாட்டுக்களையும் உள்ளடக்கியுள்ளோம். பல விதமான [...]

அணையும் அணையை சுற்றியும்…..ச.ச.முத்து

DAM-PROTEST

(எங்களுடைய பிரச்சனை என்பது எங்களுடைய எல்லைகளை கடந்து பரந்துவிட்டதைபோலவே எங்களை சுற்றிவர நிகழும் பிரச்சனைகளும் எங்களுடைய பிரச்சனைக்கான ஆதரவாகவோ எதிரானதாகவோ மாற்றமடையகூடியதாக உலக அரசியல் மாறிவருகிறது.இனத்தால் மொழியால் பண்பாட்டால் எம் உறவுகளான தமிழகமக்களை இப்போது சுட்டெரிக்கும் ஒரு பிரச்சனை பற்றிய மேலோட்டமான பார்வை இது.ஒருவகையில் இதுவும் எங்களதுபிரச்சனைதான்) இரண்டுநாடுகளுக்கு இடையிலான நீர்ப்பிரச்சனைபோன்றே அது பெருகி வந்துகொண்டிருக்கிறது. தினமும் கேரளாவிலிருந்து ஏராளமான தமிழர்கள் அச்சம் காரணமாக தமிழகஎல்லைக்குள் இடம்பெயர்ந்துந்து கொண்டிருக்கிறார்கள்.தினசரி தொழில்நிமித்தமாகவும், வேறுஅலுவல் காரணமாகவும் கேரளாவுக்குள் நுழையும் தமிழர்கள் [...]

பூமி போல் இன்னொரு பூமியா ?

earth

நட்சத்திரமொன்றிலிருந்து உயிரினங்கள் வாழக்கூடிய வலயத்திலுள்ள, பூமி போன்ற கிரகமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா இன்று தெரிவித்துள்ளது. கெப்ளர் விண்வெளித் தொலைக்காட்டி மூலம் கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்ட இந்த கிரகத்திற்கு கெப்ளர் 22-பி (Kepler 22-b) என பெயரிடப்பட்டுள்ளது. எமது சூரியனைப் போல் அல்லாத நட்சத்திரமொன்றை கெப்ளர் 22-பி கிரகம் சுற்றி வருகிறது. ஒரு தடவை அதன் சொந்தச் சூரியனை சுற்றுவதற்கு 290 நாட்கள் செல்கிறது. நட்சத்திரங்களின் அளவு, வெப்பநிலை முதலான விடயங்களை கருத்திற்கொண்டு அந்த நட்சத்திரத்திலிருந்து [...]

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

iran

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால், அரபு நாடுகளில் இருந்து எண்ணெய் கொண்டு செல்லப்படும் முக்கிய கடல் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) அடைப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த, அந் நாட்டின் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. இந் நிலையில் அந்த நாட்டின் எண்ணெய்யை வாங்குவதை தடை செய்யவும் ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன. இதற்காக அந்த நாட்டிலிருந்து கச்சா [...]

பிரித்தானிய தொண்டு நிறுவனத்திடம் வரி கேட்ட சிங்கள அதிகாரிகள்

uk-charity

பிரித்தானியா தொண்டு நிறுவனம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிய 322 சற்கர நாட்காளிகளுக்கு இறக்குமதி வரி கேட்டு தடுத்து வைத்ததுள்ளதாக பி.பி.சி செய்தி இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று மாதங்களாக தடுத்து வைத்து பல பிரச்சனைகளை உருவாக்கி அது சரியில்லை இது சரியில்லையென காரணம் காட்டி 8ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கட்டுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனத்ததால் அனுப்பப்பட்டது என கூறி ஆதாரங்கள் காட்டியபோதும் அனுமதிக்க மறுத்துவிட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் படும் அவலத்திற்கு இதுவும் [...]

லெப்.கேணல் நம்பியின் நினைவு நாள்…மாவீரத்தை  நெஞ்சில் நினைவு கூறுவோம்

Lt_Col_Nambi

மணலாறு கோட்டத்தில் 30.12.2000 அன்று தவறுதலாக இடம்பெற்ற வெடி விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் நம்பி (துசி) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தன்னை முழுமையாக அர்ப்பணித்து விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நினைவு கூறுவோம்.

புயல் நிவாரண நிதியாக ரூ.150 கோடி அறிவிப்பு : ஜெ. உத்தரவு

jeyalalitha

தானே புயலால் தமிழகத்தில் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நிவாரண பணிகளை கவனிக்க ரூ.150 கோடி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் , தமிழகத்தின் வங்காள விரிகுடா கடல் பகுதியில் கடந்த 25.12.2011 அன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 27.12.2011 அன்று வலுவடைந்து புயலாக உருவெடுத்தது. ‘தானே’ என்று பெயரிடப்பட்ட அந்த புயலானது புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே இன்று 30.12.2011 காலை 6.30 மணியளவில் கரையைக் [...]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

December 2011
M T W T F S S
« Nov   Jan »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Photo Gallery