
யாழ் பல்கலைக்கழக மாணவனான 27 அகவையுடைய வேதாரணியம் லதீஸ் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதால், பல்கலைச் சூழலில் பாரிய பதற்றம் நிலவி வருகின்றது. நேற்று (27-11-2011) திருநெல்வேலியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் கல்வி கற்கும் தனது நண்பனைப் பார்வையிடச் சென்ற இவர், அங்கு நடைபெற்ற மாவீரர் வணக்க நிகழ்வில் கலந்துகொண்டார் என்ற சந்தேகத்தில் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என மாணவர்கள் கருதுகின்றனர். கைதடியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் சித்த மருத்துவம் கற்றுவரும் இந்த மாணவன், வடமராட்சி கிழக்கு உடுத்துறை (ஆழியவளை) [...]

அனைத்து ஊடகங்களும் வெளியிடுமாறு வேண்டுகின்றோம்… ஈழத் திரைத்துறை கலைஞர்களால் “வாக்குமூலம்” எனும் குறும்படம் கார்த்திகை 27 2011 இல் வெளியிடப்பட்டது. இக் குறும்படமானது தமிழ் நாட்டில் இருந்து வெளிவருகின்ற “ஆனந்தவிகடன்” வார இதழில் வெளிவந்த ஒரு போராளியின் கடிதத்தை அடிப்படையாக கொண்டது. நெஞ்சை உலுப்பும் காட்சிகளைக் கொண்ட இத் திரைப்படத்தை 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பார்க்கவேண்டாம். எமது விடிவிற்காய்ப் போராடி இறுதியில் கைதாகி தற்போது கடும் சித்திரவதைகளை அனுபவித்து வரும் எம் தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் [...]

விடுதலைக் கனலை விடுதலைக் கனலை வேடிக்கை என்றே நினைத்தாயா? பெறுதலை விடவும் தருதலே பெருமை தமிழா நெஞ்சில் விதைத்தாயா? யுத்தம் முடியவில்லை!-இன்னும் யுத்தம் முடியவில்லை!-எங்கள் ரத்தம் கொதிக்கும் வரையில் யுத்தம் முடிவதில்லை! உறக்கம் எமக்கு இல்லை!-சிங்களா உறக்கம் எமக்கு இல்லை! ஈழம் பிறக்கும் வரையில் உறக்கம் எமக்கு இல்லை! பிறக்கும் எமது பிள்ளை!-புலியாய் பிறக்கும் எமது பிள்ளை! அறுக்கும் உந்தன் குடியை ! அங்கே பறக்கும் எங்கள் கொடியே! நீர் இறைக்கவில்லை-மண்ணில் பயிர் விதைக்கவில்லை! ரத்தம் இறைத்து [...]

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக முன்னாள் அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பாகிஸ்தான் தூதராக இருந்த உசேன் ஹக்கானி தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கான புதிய தூதராக ஷெர்ரி ரஹ்மானை பாகிஸ்தான் அரசு உடனடியாக நியமித்துள்ளது.பாகிஸ்தான் அரசு அனுப்பிய ஒரு முக்கிய தகவலை, அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டார் என்பது உசேன் ஹக்கானி மீதான குற்றச்சாட்டு. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையாக இது உணரப்பட்டதால், அவர் உடனடியாக அமெரிக்காவில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு அழைக்கப்பட்டார்.பின்னர், இஸ்லாமாபாத் [...]

ரஷிய ஒன்றியக் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக விளாதிமிர் புதின் (59) அறிவிக்கப்பட்டுள்ளார். ரஷிய அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.தற்போதைய பிரதமரான விளாதிமிர் புதினை அதிபர் வேட்பாளராக அறிவிக்க கடந்த செப்டம்பரில் நடைபெற்ற கட்சியின் ஆண்டுக் கூட்டத்தில் தற்போதைய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் ஒப்புக் கொண்டார். இதுதொடர்பான அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட புதின், மெத்வதேவுக்கும், கட்சிக்கும் தாம் நன்றிக் கடன்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரஷிய நிர்வாகத்தில் உறுதித்தன்மையைக் [...]

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக்கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராமத்தில் 3-வது கட்ட உண்ணாவிரதம் ஞாயிற்றுக்கிழமை 41-வது நாளாக நீடித்தது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக 4-வது கட்ட போராட்டத்தை தொடங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், “கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட [...]

தமிழகத்திற்கு வருகை தந்திருக்கும், மார்க்சிய ஆய்வாளர் ரான் ரைடனவருடன் கலந்துரை யாடும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்தது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. திருச்சி அய்க்கப் அரங்கில் 08.11.2011 அன்று மாலை நடந்த இக்கலந்துரையாடலில், கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், கட்சியின் தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் திருச்சி தமிழுணர்வாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் தொடக்கமாக, கல்பாக்கம் தோழர் டி.வி.நடராசன், ரான் ரைடனவர் பற்றிய அறிமுகவுரை நிகழ்த்தினார். ரான் [...]

விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத் தழுவிய போராளிகளுக்கு, மரியாதை செலுத்தும் மாவீரர் நாள் 1989 ஆம் ஆண்டு முதல் தான் தொடங்கியது. முதல் மாவீரர் நாளில் விடுதலைப் புலிகள் தலைவர் மேதகு பிரபாகரன் உரை யாற்றினார். இந்திய தமிழீழப் போர் உக்கிரம் அடைந்து கொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் தினமும் தம்முயிரை தமிழீழ விடு தலைக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். 1989, கார்த்திகை27, அன்று அடர்ந்த தமிழீழக் காடு ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், முதலாவது விடுதலைப் புலிப் போராளி வீரச்சாவு நாளான கார்த்திகை 27ஐ மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தி [...]

‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படம் நச்சு இனவெறிச் சிங்கள ஆட்சியாளரை வெளிச்சத்தில் நிறுத்தி தோல் உரிக்கிறது. அடக்குமுறைச் சிங்கள இனவெறியர்களின் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை மட்டுமல்ல – அக்கொடுமைகளின் மிகக்கொடிய விளைவுகளையும் இத்திரைப்படம் அலசுகிறது. தென்தமிழ் ஈழமான மட்டக்களப்பில் பிறந்த புனிதவதி – சிங்கள படைவெறியர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டாள் என்பது உண்மைச் செய்தி. அனால் அவள் வாழ்க்கை பின்பு என்ன ஆகி இருக்கும் என்னும் கேள்வியை இயக்குனர் புகழேந்தி தங்கராசா திரைப்படம் ஆக்கித் தந்திருக்கிறாரே – இது [...]

கடந்த ஒருவாரத்திற்கு மேலாக பொது மக்கள் எவரும் மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்ளக் கூடாதென சிறீலங்கா இராணுவத்தினர் வெளிப்படையாகவே பொது மக்களை அச்சுறுத்திய செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை அனைவரும் அறிந்த விடயமாகும். மேற்படி தாக்குதல் சம்பவங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. இது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கை: கடந்த 24-11-2011 அன்று யாழ் பல்கலைக்கழக வளவுக்குள் அத்துமீறி நுழைந்த இனம் தெரியாத நபர்கள் மாணவர் ஒன்றியக் கட்டடத்தினுள் [...]
Nov 27 2011 | Posted in
செய்திகள் |
Read More »