தமிழக ஆசின் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவீரர் நாளை நடத்தியுள்ளனர்

தமிழகத்தில் மாவீரர் நாள் கொண்டாட அரசு தடைவிதித்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் அத்தடையை மீறி, சென்னை, கோயம்பேடு, வீரநங்கை செங்கொடி அரங்கில், நேற்று மாலை மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை நடத்தினார். கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு மாலை 4 மணிக்கு மணிமாறன் குழுவினரின் பறையிசையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சிறிவாணி நாட்டியாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது. காசிஆனந்தன் எழுதிய “வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா போராடுமா’ என்கிற பாடலுக்கும் அறிவுமதி [...]







