Rste

Rste-செய்திகள்

RSTE-NEWS

களனி பல்கலைக்கழகத்தில்  மாணவர்கள் மோதல் !

Faculty_of_Medicine_University_of_Kelaniya_3

களனி பல்கலைக்கழகத்தில்  விஞ்ஞானபீட மாணவர்களிடையே  வியாழக்கிழமை  காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட மோதலில் சுமார் எட்டு  பேர் காயமடைந்ததாக கூறப்படுகின்றது. இந்த  சம்பவம் குறித்து மூன்று  முறைப்பாடுகள் களனி காவல் நிலையத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த களனி காவற்துறையினர்  இச்சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர். மாணவர் குழுக்களுக்கிடையிலான மோதலின் போது காயமடைந்த எட்டுப் பேரில் ஐந்து பேர் ராகம வைத்தியசாலையிலும், மூவர் கிரிபத்கொட வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இம்மோதல் குறித்து களனி காவற்துறையினர்  [...]

தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் பதிமூன்றாயிரம் பேர் நீக்கம்

tamilnadu11

 கடந்த புதன்கிழமை மக்கள் நலப்பணியாளர்கள் 13,௦௦௦ பேர் நீக்கப்பட்டதாக அதிரடியாக முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அவர்கள் அவ்வேலையில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டனர். இதனை நீக்கப்பட்ட அப்பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். மேலும் பல கட்சிகளும்,சமூக ஆர்வலர்களும் கண்டித்துள்ளனர்.இதனை தொடர்ந்து தி.மு.க.வும் வரும் நவம்பர்15 தேதி போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது. இப்பணியாளர்கள் கடந்த தி.மு.க.ஆட்சியில் நியமிக்கப்பட்டதால் தி.மு.க.ஆதரவாக செயல்படுகின்றனர் என்றும் அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

கடல் வழியாக மின்சாரத்தை பகிர்ந்துக் கொள்ளும் இந்தியா-இலங்கையின் விசம ஒப்பந்தம்

388078_2657239553462_1330051663_3134976_1657259279_n

ஏற்கனவே தமிழர்களை அழிப்பதற்கு ஒப்பந்தம் போட்டுக்கொண்ட இலங்கை-இந்தியா தற்போது கடல்வழியாக மின்சாரத்தை மாற்றிக்கொள்ளும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது.இந்த மின்சாரம்  தமிழ்நாட்டின் கூடன்குள அணுமின் நிலைய மின்சார உற்பத்தியில் இருந்தே பகிர்ந்தளிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.இந்த மறைமுக ஒப்பந்தத்தின் விவரங்கள் பின் வரும்படி ஆங்கிலத்தில்

கூடன்குளத்திலிருந்து ரசியாவுக்கு திரும்பும் விஞ்ஞானிகள்

images

கூடங்குளத்தில் அடுத்த மாதம் தொடங்கவிருந்த மின் உற்பத்தியை மத்திய அரசு மூன்று  மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது. இதனால் ரஷ்ய விஞ்ஞானிகள் பலர் நாடு திரும்ப முடிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம்,கூடங்குளத்தில் ரூ.13,500 கோடி செலவில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் அணு உலைக்கான பணிகள் முடிவடைந்து வரும் டிசம்பரில் மின் உற்பத்தி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இவற்றில் 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும் என [...]

அமைச்சர்கள்  மாற்றத்தை தொடர்ந்து காவற்துறை அதிகாரிகள்   அதிரடி   இடமாற்றம்

Logo_TNP

தமிழகம் முழுவதும் 3 ஐ.ஜிக்கள், 8 டி.ஐ.ஜிக்கள், 12 எஸ்.பிக்கள் என மொத்தம் 23 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் (உள்துறை) ரமேஷ்ராம் மிஸ்ரா வெளியிட்டுள்ள உத்தரவு: (அடைப்புக் குறிக்குள் அவர்கள் வகித்த பழைய பணி விவரம்): மதுரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழல் தடுப்புப் பிரிவு தலைமை கண்காணிப்பு அதிகாரியாக கே.வன்னியபெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். (மேற்கு மண்டல ஐ.ஜி.) மத்திய மண்டல ஐ.ஜியாக கே.சொக்கலிங்கம் இடமாற்றம் [...]

இலங்கையில் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்கும் கனடா முடிவுக்கு நாம் தமிழர் அமைப்பு வரவேற்பு

commenwealth_logo

இலங்கையில் 2013ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள்  அமைப்பு மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளதற்கு அமெரிக்க நாம் தமிழர் அமைப்பு வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த ஞாயிறன்று நடந்த பொதுநலவாய மாநாட்டின்போது, 2013ம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை நடத்தவுள்ள இலங்கையின் அதிபர் ராஜபக்சவை பேச அழைத்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் வெளிநடப்பு செய்தது மிகவும் துணிகரமான, பாராட்டுக்குரிய செயலாகும். இலங்கைக்கு [...]

தமிழ்த் தேசிய நோக்கில் அறிஞர் அண்ணா

images

தேர்தலே இலக்கு, சாமர்த்தியமே வழிமுறை: ஓர் இயக்கம் இக்கட்டான சூழலில் தனது கொள்கைகளைக் கைவிடுவது என்பது வேறு, கொண்ட கொள்கையைக் கைவிட காலத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது என்பது வேறு. அண்ணா மீது அன்பு கொண்டவர்கள் திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை வேறு வழியின்றி அண்ணா கைவிட்டதாகக் கருதிக் கொள்வார்கள். ஆனால் அண்ணாவின் செயல்பாடு இரண்டாவது வகையைச் சேர்ந்தது. திராவிட நாடு பிரிவினையை அண்ணா நம்பினாரா? திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையில் அண்ணா உண்மையிலேயே நம்பிக்கை வைத்திருந்தாரா? 1949இல் திராவிட [...]

குஜராத் கலவர வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை

godhra-train3

குஜராத்தின் சர்தர்புரா கலவர வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 31 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு குஜராத்தில்  பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. இந்த கலவரங்களில் பதிவான முதல் கலவர வழக்கு தான் ‘சர்தர்புரா’ என்ற இடத்தில் சிறுபானமையினர் 33 பேர் உயிருடன் கொழுத்தப்பட்ட சம்பவம். உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு இந்த கலவரம் தொடர்பான விசயங்களை விசாரித்து வந்தது. இந்த [...]

சனல் 4 தொலைக்காட்சி தனது விவரணத்திரைப்படத்தில் சிறீலங்காவில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் கோரக்காட்சி -சுவிஸ் ஈழத்தமிழரவை கலந்துரையாடலுக்கான அழைப்பிதழ்

swiss_flag

சனல் 4 தொலைக்காட்சி தனது விவரணத்திரைப்படத்தில் சிறீலங்காவில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் கோரக்காட்சிகளை வெளியிட்டதைத் தொடர்ந்து அது ஏற்படுத்தியிருந்த அதிர்வலைகள் மிகப்பெரியது. குண்டு வீசப்பட்ட மக்கள் குடியிருப்புக்கள், கொல்லப்பட்ட அப்பாவி மக்கள், பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்ட தமிழ் பெண் போராளிகள், … நீதிக்கு முரணான முறையில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் போராளிகள் என அவ் விவரணப்படம் யுத்த இறுதியில் சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்களை ஆவணம் செய்துள்ளது. அண்ணளவாக 40000 ஆயிரம் மக்கள் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என ஐக்கியநாடுகள் சபை [...]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

November 2011
M T W T F S S
« Oct   Dec »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Photo Gallery

Plugin from the creators of Brindes Personalizados :: More at Plulz Wordpress Plugins