
தமிழகத்தில் மாவீரர் நாள் கொண்டாட அரசு தடைவிதித்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் அத்தடையை மீறி, சென்னை, கோயம்பேடு, வீரநங்கை செங்கொடி அரங்கில், நேற்று மாலை மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை நடத்தினார். கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு மாலை 4 மணிக்கு மணிமாறன் குழுவினரின் பறையிசையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சிறிவாணி நாட்டியாலயா பள்ளியைச் சேர்ந்த மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது. காசிஆனந்தன் எழுதிய “வன்னி மண்ணிலே மயில் கூத்தாடுமா போராடுமா’ என்கிற பாடலுக்கும் அறிவுமதி [...]

தமிழர்கள் பெருவாரியாக வாழும் யாழ்ப்பாணம் மீது ஜெயவர்த்தனாவின் விமானங்கள் வெறித்தனமாகக் குண்டுகளை வீச… சிங்களவர் படை நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தக் கிளம்பிவிட்டது என்னும் செய்தி நம்மை பதைபதைக்கச் செய்தது. இருப்பினும், தொடர்ந்து விடுதலைப்புலிகள் நிகழ்த்திய வீராவேசமான எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் சிங்கள இராணுவம் திணறிப்போய் பின்வாங்குகிறது என்னும் செய்தி சற்று நிம்மதியைத் தருகிறது. விடுதலைப்புலிகளால் சகல வசதிகளோடு இருக்கும் சிங்கள இராணுவத்தைத் தொடர்ந்து சமாளிக்க முடியுமா? சிங்கள ஓநாய்கள் ஒருவேளை உள்ளே புகுந்துவிட்டால், அப்பாவித் தமிழ் [...]

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈந்த எமது தேசத்தின் செல்வங்களை வணங்கும் தேசிய மாவீரர்நாள் நிகழ்வுகள்இ மாவீரர்குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பு நிகழ்வுகளோடு சுவிஸ் Forum Fribourgமண்டபத்தில் (27.11.2011); வரலாறு காணாத மக்கள் நிறைந்திருக்க எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுஇ காலத்தின் தேவை கருதி தேசியத்தலைவர் அவர்கள் 2007இ 2008 ஆம் ஆண்டுகளில் ஆற்றிய மாவீரர் உரைகள் மீள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மணி ஓசையுடன் பறை முழங்கிஇ துயிலும் இல்லப் பாடலுடன் [...]

நுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற தமிழ் அரசியல் கைதிகள் தீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் மீது சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் நடத்துவதனைப் போன்ற காட்சிகள் இந்த காணொளியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணொளியொன்று வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜீ.டபிள்யூ.கொடிப்பிலி உத்தரவிட்டுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் 53 புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் [...]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் நகுலன் மின்னேரியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ‘லங்கா நியூஸ் வெப்‘ இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. கேணல் நகுலன் என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி கணபதிப்பிளை சிவமூர்த்தி, கடந்த 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். மின்னேரியாவில் உள்ள இரகசியத் தடுப்புமுகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் [...]

பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 11-தேதி பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜையின் போது பெரும் கலவரம் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். இதற்கு நீதி விசாரணை வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியதை அடுத்து தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் [...]

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு சதிதிட்டம் தீட்டியுள்ளதாக பழ.நெடுமாறன், வைகோ ஆகிய தமிழகத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில், “பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அணையில் வெடிப்புகள் ஏற்பட்டுவிட்டதாகவும் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி மற்றும் அம்மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து முற்றிலும் பொய்யானப் புகாரைக் கூறியிருக்கிறார்கள். பெரியாறு அணை உடைந்து அதன் விளைவாக ஏற்பட்ட [...]

ராஜீவ் காந்தி கொலையில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் உள்பட மூவரால் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் ஜனவரி 31-க்கு ஒத்திவைத்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களின் மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நடைபெற்றது.அப்போது, தமிழக அரசின் சார்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. [...]

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி உள்பட 5 பேருக்கு : தில்லி உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. இதே வழக்கில், கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமார், சினியுக் ஃபிலிமிஸ்சின் கரீம் மொரானி, குர்காவ் ஃப்ரூட் அண்ட் வெஜிடபிள் ப்ரைவைட் லிமிடட் இயக்குனர்கள் ஆசிஃப் பாவ்லா மற்றும் ராஜீவ் அகர்வால் ஆகியோரையும் ஜாமீனில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளையில், முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் சித்தார்த் பெகுரா ஜாமீன் மனு மீதான உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது. கனிமொழி, சரத்குமார் [...]

தமிழீழம் -யாழ் பல்கலைக்கழகம் பிரித்தானியா - இலன்டன் பிரித்தானியா கொவன்றி யேர்மனி – டோர்ட்முண்ட் பிரான்சில் – லுபுசே பிரான்ஸ் ஒபேவில்லியஸ் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நோர்வே – ஒஸ்லோ டென்மார்க்கில் ஆஸ்திரேலியா கனடா அயர்லாந்து – டப்ளின் பெல்ஜியம் அன்ர்வேர்பேன் தமிழ்நாடு குவைத் சவுதி