Rste

போர்க்குற்றத்தைப் பயன்படுத்தி அரசியல் தீர்வைப் பெறுங்கள்!  - கூட்டமைப்புக்கு அமெரிக்கா ஆலோசனை!!

American-flag

சிறிலங்கா அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள  போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு ஒன்றை வென்றெடுப்பதில் கவனம் செலுத்தும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கொள்கை வகுப்பாளர்கள் கூறியுள்ளதாக தெரிய வருகின்றது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (28.10.11) மூன்றாவது நாளாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கொள்கை [...]

போர்க்குற்றவாளி ‘ராசபக்சே’வை கைது செய்ய வேண்டும் : ஆஸ்திரேலிய தமிழர்கள் போராட்டம் !

perth20protest

ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் காமன்வெல்த் நாட்டு தலைவர்களின் மாநாடு வெள்ளிகிழமை  ஆரம்பமாகியுள்ள தருணத்தில் , இந்த மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள இலங்கை  அதிபருக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இலங்கை  அதிபர் மகிந்த ராசபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் பங்கேற்ற தமிழர்கள்  தெரிவித்ததாக ஏஏபி செய்தி வெளியிட்டுள்ளது. போர்க்குற்றவாளியான மகிந்த ராசபக்சேவுக்கு   ஆஸ்திரேலியாவில் சிவப்பு கம்பள   வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் ராசபக்சே  கைது செய்யப்பட வேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற [...]

மத்திய அரசு சதி செய்வதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

vaiko-5

ராஜீவ் காந்தி கொலையில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய பேரறிவாளன் உள்பட மூவரால் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரது கருணை மனுவை ஜனாதிபதி ஏற்கெனவே நிராகரித்து விட்டதால், இவர்களின் தூக்கு தண்டணையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று [...]

உள் நுழைவிற்கான வாசலைத் திறக்கும் அனுசரணைச் சாவி – இதயச்சந்திரன்

kadafi

பாலைவனச் சிங்கம் என்று அழைக்கப்பட்ட கேணல் கடாபியின் மறைவோடு மேற்குலகின் மத்திய கிழக்கு மீதான ஆதிக்கம் வலுவடைகிறது. மேற்குலக ஆதரவாளராக இருந்த ஹொஸ்னி முபாரக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு சிறையில் தள்ளப்பட்டாலும் இன்னமும் இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது. யேமன் அதிபர் அலி அப்துல்லாசாலே, அதிகாரத்தை ஒப்படைத்தால் அவர் குற்றங்களிலிருந்து தப்பலாம் என்கிற வகையில் ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த மாற்றங்கள் அனைத்தும் அரபுலகில் மேற்குலகின் இராஜதந்திர ஆதிக்கம் மேலோங்கி இருப்பதைப் புலப்படுத்துகிறது. ஆனால் சிரியா விவகாரம் இன்னமும் [...]

அப்துல் கலாமின் அணுஉலை ஆய்வு மத்திய அரசுக்கு ஆதரவானது : எதிர்க்கும் கூடங்குள போராட்டக்குழு

Centre_To_Seek_11493

கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆய்வு மேற்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அணு உலை எதிர்ப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இந்த அணு உலைக்கு எதிராக நடந்து வரும் தொடர் உண்ணாவிரதத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந் நிலையில் இந்த விவகாரத்தில் மக்களை சமரசம் செய்ய அப்துல் கலாமின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது. இதையடுத்து இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்தும் மக்களுடன் பேச்சு நடத்தத் [...]

தமிழர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் காங்கிரசு 
நிறைவேற்றவில்லை : அத்வானி ஆவேசம் !  

advani

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பிஜேபி மூத்த தலைவரில் ஒருவரான அத்வானி நேற்று மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.  இதில் அவர் பேசியதாவது,” “ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமா அணு உலைகளின் நிலையை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள அணு மின் நிலையங்கள் ஆய்வு செய்து வருகின்றன. அணு மின் திட்டங்களை கைவிடும் நடவடிக்கைகளிலும் பல்வேறு நாட்டு அரசுகள் ஈடுபட்டுள்ளன.குறிப்பாக, கடலோரப் பகுதிகளிலும், கடலுக்கு அருகிலும் உள்ள அணு [...]

7 ஆம் அறிவு படத்திற்கு இலங்கையில் தடை?

7m arivu

7 ஆம் அறிவு படம் குறித்து வெவ்வேறு அபிப்ராயங்கள் இருந்தாலும், ஏகோபித்த பாராட்டு அப்படத்தில் இடம் பெறும் தமிழன் குறித்த வசனங்களுக்குதான். ஒட்டுமொத்த தியேட்டரும் கைதட்டி ஆர்ப்பரிக்கும் அந்த காட்சிகளில் வசனத்தை ஒப்புக்கு ஒப்பிக்காமல் உணர்ச்சி பிழம்பாக உச்சரித்திருக்கிறார் சூர்யா. இவ்வளவு பேசிய பின் அந்த படத்தை இலங்கையில் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்த்தால் நடக்குமா? படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க அந்நாட்டு அரசு தடை விதித்திருப்பதாக தகவல். புத்தருக்கு இணையானவர் போதிதர்மர் என்ற வசனத்திற்காகவும், திருப்பி [...]

ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் சிட்னி தடுப்புமுகாமில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

aus-refugee

சிட்னி குடிவரவு வதிவிட வீடமைப்புத் தொகுதியில், நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்ட இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் இவர் மரணமாகியுள்ளார். இவரது மரணம் இடம்பெற்ற சூழல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அவுஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். வில்லாவூட் தடுப்பு முகாமில் கடந்த ஆண்டு அடுத்தடுத்து நிகழ்ந்த நான்கு தற்கொலைகளை அடுத்து கூரை மீதேறி போராட்டம் நடத்தியவர்களில், இன்று மரணமான இளைஞரும் ஒருவராவார். சூட்டி [...]

கயிறே, என் கதை கேள்! மகளே, என்னை மன்னித்துவிடு! முருகன் சொல்லும் கண்ணீர் வரலாறு  – தொடர் 09

murugan & nalini

நன்கு தமிழ் பேசத் தெரிந்தவர் என்கிற காரணத்துக்காகவே நளினி சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். சம்பவ இடத்தில் நளினி எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பார்த்தாலே, இது அவரைச் சிக்கவைப்பதற்காகவே புனையப்பட்ட கதை என்பது புலனாகும். அரசுத் தரப்பு ஆவணத்தில் 77-வது பக்கத்தில், ‘சிவராசன் தமிழ்நாட்டுக்காரர் போல் பேசக்கூடிய ஆற்றல்கொண்டவர்’ என எழுதப்பட்டு உள்ளது. அவரே நன்கு தமிழ் பேசும்போது, மொழிப் பிரச்சினைக்காக ஏன் நளினியை அங்கே அழைத்துச் செல்ல வேண்டும்? அரசுத் தரப்பு [...]

கண்ணீர் பட்டாசு

fire-works-factory

தீபாவளி நெருங்கிவிட்டது. பட்டாசு சத்தம் கேட்கத் துவங்கிவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கும் பட்டாசு வெடித்துக் கொண்டாடத் தயாராகிவிட்டார்கள். இந்த வேட்டுச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அதற்குள் கனத்த சோகத்தோடு ஒரு அழுகுரல் ஒலிப்பதை நீங்கள் கேட்டதுண்டா? கடந்த 1999 முதல் 2011 ஜனவரி வரை விருதுநகர் மாவட்டத்தில் 650 பட்டாசுத் தொழிற்சாலைகளில் நடந்த 70க்கும் மேற்பட்ட வெடிவிபத்துகளில் 500க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரு மளவு குழந்தைகளும் உண்டு. சமீபத்தில் சிவகாசியில் நடந்து வரும் குழந்தை [...]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

October 2011
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Photo Gallery

Plugin from the creators of Brindes Personalizados :: More at Plulz Wordpress Plugins