
அரசாங்கத்தின் முழுமையான நிர்வாகத்திற்குள்ளிருக்கும் நகரில் நடத்தப்பட்டுள்ள இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் எம்மை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருக்கின்ற தமிழர்களின் அரசியல், சமூக, கலாசார, பொருளாதார அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கும் பேரினவாத நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். தந்தை செல்வா, தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்த பெருந்தலைவராகும். மலையக தமிழர்களின் குடியுரிமை பறிப்பிற்கு எதிராக கிளர்ந்து எழுந்தவர். ஈழத்து காந்தி என்று போற்றப்படும் தந்தை செல்வா அவர்களை, இலங்கையில் வாழ்கின்ற [...]

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆயுததாரிகள் நிகழ்த்திய வாள்வீச்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பிரதிநிதியான திரு.பருதி அவர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்தை விட்டு வெளியில் வந்த பொழுது, வெளியில் காத்திருந்த முகமூடியணிந்த ஆயுதபாணிகளால் கத்திகள், வாட்கள் சகிதம் இவர் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த திரு.பருதி அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் மீதான கொலைவெறித் தாக்குதலின் [...]

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.பெரும்பாலும் தென் மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.இந்த கனமழையில் பத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழ்நததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை, கன்னியாகுமரி அருகே நகர்ந்திருப்பதால், தென் மாவட்டங்களில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் பேசுகையில், “ இதுவரையில் வங்கக்கடலில் [...]

தைவானில் ஞாயிற்றுக்கிழமை கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பல அடுக்குமாடி குடியிருப்புகள்,கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இருப்பினும் சுனாமி பயம் எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது. தைவானின் வட கிழக்கில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.5 ஆக இருந்துள்ளது. கடலுக்கு அடியில் 141.4 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கீலுங் என்ற நகருக்கு கிழக்கே உள்ளது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி. இந்த நிலநடுக்கத்தால் சில கட்டடங்கள் இடிந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் [...]

ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படைக் கும்பல் மீனவர்களை தாக்கி படகை சேதப்படுத்தி விரட்டியுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். மீனவர்களில் ஒரு பகுதியினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் நான்கு பேர் இருந்த படகுடன் தங்களது படகை மோத விட்டனர். இதில் அந்தப் படகு சேதமடைந்தது. பின்னர் கடுமையாக எச்சரித்து விட்டு இலங்கைக் கடற்படையினர் சென்று விட்டனர். படகு சேதமடைந்து அதில் இருந்த நான்கு மீனவர்களும் [...]

இலங்கையில் 2013ம் ஆண்டில் நடைபெறவுள்ள அடுத்த காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்குமாறு இலங்கை அதிபர் மகிந்தா ராசபக்சே அழைப்பு விடுத்து பேசிய போது, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக கனடா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பேர்த் நகரில் நடைபெற்று வந்த காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்தது. மாநாட்டின் முடிவில் இலங்கையின் அதிபர் மகிந்தா ராசபக்சே , அடுத்த காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றுமாறு 53 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து பேசியதாக தெரிகிறது. அழைப்புரையாற்ற மகிந்தா ராசபக்சே அழைக்கப்பட்டதும், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கனடா அதிகாரிகள் தெரிவித்தனர். [...]