Rste

விடிவிக்கப்பட்ட போராளிகளை வீட்டுக்கு அழைத்துச்செல்ல அனுமதி மறுப்பு

resize_20110908042058

புனர்வாழ்வுப் பயிற்சிகளுக்கு பின்னர் இலங்கை அரசால் கடந்த வெள்ளியன்று பெற்றோரிடம் கையளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை தம்முடன் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுகின்றது என்று அவர்களது பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்படுவதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்திருந்த, 1800 பேர் நேற்று இலங்கை அரசால் விடுதலை செய்யய்பட்டிருந்தார்கள். விடுதலை செய்யப்பட்ட யாரையுமே  பெற்றோர்களுடன் வீடுகளுக்குச் செல்வதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியிடமிருந்து தமது பிள்ளைகளைப் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக, வவுனியாவில் இருந்து இந்த வைபவத்திற்கென கொழும்புக்கு [...]

மூவர் உயிரை காக்க உண்ணாவிரதம் : பழ.நெடுமாறன்

Nedumaran

மூன்று தமிழர்கள் உயிரை காக்க வேண்டும்.மரணதண்டனை முற்றும் முழுதாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகமெங்கும் அனைத்து நகரங்களிலும், ஊர்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று  தமிழர்கள் உயிர்காப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்… சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி அருகில் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறவிருக்கும் உண்ணாவிரதப் [...]

வாச்சாத்தி தீர்ப்பு -அடித்தட்டு மக்களுக்கு எதிரான அநீதிகள் ஒழியட்டும் : சீமான் அறிக்கை

seeman

வாச்சாத்தி கிராமத்து மக்கள் மீது வன, காவல் அதிகாரிகள் புடைசூழ்ந்து நடத்திய அராஜகம் அப்பட்டமான கொடுஞ்செயல் என்பதை தருமபுரி அமர்வு நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக்கியுள்ளது என்றும், இதற்குமேலும் சமூகத்தின் அடித்தள மக்கள் மீது இப்படிப்பட்ட அரசு வன்முறை நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் அரசுகள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:   1992ஆம் ஆண்டு, தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் சந்தனக் கட்டைகள் கடத்தப்படுவதாக தகவல் [...]

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்கிறது

52050900_fish21

ராமேஸ்வரத்திலிருந்து   கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும்  தூப்பாக்கி சூடு, மிரட்டி பொருட்களை பறித்து செல்லுதல் போன்ற பல்வேறு கொடுமைகளை செய்து  வருகின்றது இலங்கை கடற்படை. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 400 படகுகளில் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மிரட்டியும் கல்வீசியும் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை [...]

கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர் வரலாறு -[3]

mrugan-story

கடந்த 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்… இப்போதும் என் மனதுக்குள் அட்சதை தூவும் சத்தம் கேட்கிறது. நானும் நளினியும் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டு புதுமணத் தம்பதியாக சென்னை திரும்பினோம். மனதுக்குள் ஆயிரமாயிரம் கற்பனைகள். சினிமா காதலுக்கே உரிய கனவுகளைப் போல் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவும், கொஞ்சி மகிழவும் ஆசைப்பட்டோம். ஆனால், தலைப்பிள்ளையைத் தக்கவைக்கக்கூட போராட வேண்டிய நிலை வரும் என்பதை எந்த சொப்பனமும் எங்களுக்குச் சொல்லவில்லை. அதிகாரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு நானும் நளினியும் மசியாத நிலையில்… [...]

தூக்கை ரத்து செய்ய  அமைச்சரவை தீர்மானம் தான் அவசியம் – கருணாநிதி

karuna-sonia

அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி, அந்த தீர்மானத்தை  ஆளுனரின் கவனத்துக்கு அனுப்பி வைத்து , குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்து அனுப்பினால்தான் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும் என்று முன்னாள் முதலமைச்சரும் , திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார். முன்னதாக திமுக அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கும் விழா, முரசொலி அறக்கட்டளை சார்பில் பரிசளிப்பு விழா, விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சென்னை [...]

மோடி மதக்கலவரத்தை தூண்டினர் என்று சாட்சியம் அளித்தவர் கைது !

KPN photos

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த மதக்கலவரத்தை அனுமதிக்குமாறு முதல்வர் நரேந்திர மோடி குஜராத் மாநில  காவல்துறைக்கு உத்தரவுயிட்டதாக  உச்சநீதிமன்றத்தில் சாட்சிப் அளித்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் நேற்று வெள்ளிக்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளார்.  இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவியில் இருக்கும் சஞ்சீவ் பட், தனக்கு கீழ் பணிபுரிந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம், மோடிக்கு எதிராக சாட்சியமளிக்கும்படி வற்புரித்தினார் என்று   புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த புகார் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக [...]

உயர்நீதிமன்றத்தில் தன் மீதான  வழக்கிலிருந்து விடுப்பட்டார் ஜெ.

No-Legislative-Council-TN-Jayalalitha1

கடந்த 1991 – 96 ஆண்டு காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சாராக  இருந்தபொழுது , அவர் தனது பிறந்த நாள் பரிசாக ரூ.2 கோடி மதிப்பிலான வரைவோலைகள் மற்றும் காசோலைகளை பெற்றதாக, சிபிஐ வழக்கு தொடர்ந்தது. சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் தரப்பில்  மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை சிபிஐ நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் மூவர் [...]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

October 2011
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Photo Gallery

Plugin from the creators of Brindes Personalizados :: More at Plulz Wordpress Plugins