Rste

திருமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு! மனோ கணேசன் கண்டனம்!

THANTHAI SELVA_TRINCO

அரசாங்கத்தின் முழுமையான நிர்வாகத்திற்குள்ளிருக்கும் நகரில் நடத்தப்பட்டுள்ள இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் எம்மை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருக்கின்ற தமிழர்களின் அரசியல், சமூக, கலாசார, பொருளாதார அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கும் பேரினவாத நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். தந்தை செல்வா, தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்த பெருந்தலைவராகும். மலையக தமிழர்களின் குடியுரிமை பறிப்பிற்கு எதிராக கிளர்ந்து எழுந்தவர். ஈழத்து காந்தி என்று போற்றப்படும் தந்தை செல்வா அவர்களை, இலங்கையில் வாழ்கின்ற [...]

பாரிசில் தேசிய செயற்பாட்டாளர் மீது வாள்வீச்சு! பின்னணியில் சிங்கள கைக்கூலிகள்?

crime

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆயுததாரிகள் நிகழ்த்திய வாள்வீச்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பிரதிநிதியான திரு.பருதி அவர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகத்தை விட்டு வெளியில் வந்த பொழுது, வெளியில் காத்திருந்த முகமூடியணிந்த ஆயுதபாணிகளால் கத்திகள், வாட்கள் சகிதம் இவர் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த திரு.பருதி அவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் மீதான கொலைவெறித் தாக்குதலின் [...]

தமிழகத்தில் தொடரும் கனமழை , அதிகரிக்கும் உயிரிழிப்பு !

rains(1)

தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.பெரும்பாலும் தென் மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.இந்த கனமழையில் பத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழ்நததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை, கன்னியாகுமரி அருகே நகர்ந்திருப்பதால், தென் மாவட்டங்களில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு  கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு  மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் பேசுகையில்,  “ இதுவரையில் வங்கக்கடலில் [...]

தைவானில் நிலநடுக்கம் இருப்பினும் சுனாமி ஆபத்து இல்லை

RESCUE WORKERS AND FIREMEN

தைவானில் ஞாயிற்றுக்கிழமை  கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பல அடுக்குமாடி குடியிருப்புகள்,கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன, இருப்பினும் சுனாமி பயம் எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது. தைவானின் வட கிழக்கில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.5 ஆக இருந்துள்ளது.  கடலுக்கு அடியில் 141.4 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கீலுங் என்ற நகருக்கு கிழக்கே உள்ளது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி.  இந்த நிலநடுக்கத்தால் சில கட்டடங்கள் இடிந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் [...]

தொடரும் சிங்கள கடற்படையின் அட்டகாசம்…

fishermanboats

ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படைக் கும்பல் மீனவர்களை  தாக்கி படகை சேதப்படுத்தி விரட்டியுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். மீனவர்களில் ஒரு பகுதியினர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  நிலையில் அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் நான்கு பேர் இருந்த படகுடன் தங்களது படகை மோத விட்டனர். இதில் அந்தப் படகு சேதமடைந்தது. பின்னர் கடுமையாக எச்சரித்து விட்டு இலங்கைக் கடற்படையினர் சென்று விட்டனர். படகு சேதமடைந்து அதில் இருந்த நான்கு மீனவர்களும் [...]

 இலங்கைக்கு காமன்வெல்த் மாநாட்டில்  பெருத்த அவமானம் ! மகிந்தாவின்  அழைப்புரையை புறக்கணித்து வெளியேறினார் கனடா பிரதமர்

CANADA-PRESIDENT

இலங்கையில்  2013ம் ஆண்டில் நடைபெறவுள்ள அடுத்த காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்குமாறு  இலங்கை   அதிபர் மகிந்தா ராசபக்சே  அழைப்பு விடுத்து பேசிய போது, கனடா  பிரதமர் ஸ்டீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக கனடா  ஊடகம் ஒன்று செய்தி  வெளியிட்டுள்ளது. பேர்த் நகரில் நடைபெற்று வந்த காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டு ஞாயிற்றுக்கிழமை    மாலை நிறைவடைந்தது. மாநாட்டின் முடிவில் இலங்கையின்  அதிபர் மகிந்தா ராசபக்சே , அடுத்த காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றுமாறு 53 நாடுகளின்  தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து பேசியதாக தெரிகிறது.  அழைப்புரையாற்ற மகிந்தா ராசபக்சே  அழைக்கப்பட்டதும், கனடா  பிரதமர் ஸ்டீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கனடா  அதிகாரிகள் தெரிவித்தனர். [...]

நாம் தமிழர் கட்சியின்  கண்டன ஆர்ப்பாட்டம்

naam tamilar

தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கும்,  பாதுகாபிற்கும் மிகுந்த அச்சுருத்ததலாக இருக்கும் கூடன்குளம் அணுமின் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி நாள (31-10 -2011) நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நெல்லை மாவட்டம் பாளை பேருந்து நிலையம் அருகே ஜோதிபுரம் திடலில்  நடைபெற்றும் இந்த ஆர்ப்பாட்டம், காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடிபெறுகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

கனடாவில் பொங்கு தமிழ் , ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்பு !

canada20pongutamil_2

கனடாவில் செயல்பட்டு வரும் தமிழ் இளையோர் அமைப்பின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  பொங்குதமிழ் நிகழ்வு நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தின் “குயின்பார்க்” கட்டடத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த விசேட மேடையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக   கலந்துக்  கொண்ட பொங்குதமிழ்  எழுச்சி நிகழ்வு சிறப்பான  முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நமது தாயகத்தில் இலங்கை அரசின் இராணுவம் நமது மக்களை தொடர்ந்தும் வதைத்து வரும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும் கொடிதான போர்க்குற்றங்களை புரிந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் அதிபர்  மகிந்தா ராசபக்சே’விற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் [...]

மூவர் தூக்கு மனுவை நிராகரிக்கலாம் என நீதிமன்றத்துக்கு  தமிழக அரசு பதில் – சீமான் கடும் எதிர்ப்பு !

seeman1

மூவரின் தூக்கு தண்டனை விவகாரத்தில் தமிழக அரசின் பதில் மனு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்,  அம்மூவருக்கும் கருணை காட்டுமாறு கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு என்ன பொருள்? என்பதை முதல்வர் ஜெயலலிதா விளக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தமிழக [...]

ராசபக்சே குடும்ப மோதல் வலுக்கிறது !

NamalWithBasil

ராசபக்சே குடும்பத்தின் முக்கிய நபர்களான பசில் ராசபக்சே மற்றும் நாமல் ராசபக்சே இருவருக்கு இடையிலான மோதல் கடுமையான நிலைமையை அடைந்துள்ளது.இவர்களின் உட்குடும்ப சண்டை அண்மையில் மிகப்பெரிய திட்டம் ஒன்றை ரத்து செய்ததன் மூலம் தெரியவந்துள்ளது. கொழும்பு காலிமுகத்திடல் இராணுவத் தலைமையகத்தை அங்கிருந்து அகற்றிவிட்டு பஷில் ராஜபக்சவிற்கு நெருக்கமான சிலர் ஊடாக முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்கான கொடுக்கல், வாங்கல்கள் இறுதிசெய்துள்ள கெதிக் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்ய மஹிந்த உத்தரவிட்டுள்ளார். அத்துடன், காலிமுகத்திடலில் [...]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

October 2011
M T W T F S S
« Sep   Nov »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Photo Gallery

Plugin from the creators of Brindes Personalizados :: More at Plulz Wordpress Plugins