
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தெளிவான ஆதாரங்களைக் காட்டும் படங்களை ஐ.நா செய்மதி மூலம் எடுத்திருந்தாக விக்கிலீக்ஸ் தகவல் ஒன்று கூறுகிறது. 2009 ஏப்ரல் 3ம் நாள் கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல் குறிப்பிலேயே இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஐ.நாவின் செய்மதிப் படங்கள் பாதுகாப்பு வலயத்தில் எறிகணை மற்றும், விமானத் தாக்குதல்களால் பலத்த [...]

சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் தொடர்பாக கனடா நேற்று பகிரங்கமாக விமர்சித்துள்ள நிலையில், அவுஸ்ரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாடு இருதரப்பு இராஜதந்திர மோதலுக்கான களமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக றொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், போர்க்குற்றங்கள் தொடர்பான தீவிரமான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுவதற்கும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற கனடாவின் கவலையை தான் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் [...]

தர்மபுரியில் உள்ள வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது, கிராம மக்களிடம் அத்துமீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டில் இந்திய வனப்பணி அதிகாரிகள் நால்வர் உள்பட 269 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி நீதிமன்றம் இந்தியாவிலே இதை வரை அளிக்காத தீர்ப்பை அளித்துள்ளது. இவர்களில் 17 பேர் கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.இந்த வழக்குகளின் குற்றவாளிகள் அனைவரும் 1992-ல் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறையில் பொறுப்பு வகித்தவர்களாவர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட வனத்துறை அதிகாரிகள் [...]