Rste

பாதுகாப்பு வலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை நிரூபிக்கும் செய்மதிப் படங்கள் ஐ.நாவிடம் – விக்கிலீக்ஸ்

U.N-AMERICA-WIKI

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தெளிவான ஆதாரங்களைக் காட்டும் படங்களை ஐ.நா செய்மதி மூலம் எடுத்திருந்தாக விக்கிலீக்ஸ் தகவல் ஒன்று கூறுகிறது. 2009 ஏப்ரல் 3ம் நாள் கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிய தகவல் குறிப்பிலேயே இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஐ.நாவின் செய்மதிப் படங்கள் பாதுகாப்பு வலயத்தில் எறிகணை மற்றும், விமானத் தாக்குதல்களால் பலத்த [...]

சிறிலங்காவுடன் இராஜந்திரப் போர் – மோதல் வெடிக்கும் என்கிறது றொய்ட்டர்

canadian-parliament-building

சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் தொடர்பாக கனடா நேற்று பகிரங்கமாக விமர்சித்துள்ள நிலையில், அவுஸ்ரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாடு இருதரப்பு இராஜதந்திர மோதலுக்கான களமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக றொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், போர்க்குற்றங்கள் தொடர்பான தீவிரமான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுவதற்கும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற கனடாவின் கவலையை தான் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் [...]

வனத்துறை அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு : தருமபுரி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

vachathi

தர்மபுரியில் உள்ள வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்களை  பாலியல் பலாத்காரம் செய்தது, கிராம மக்களிடம் அத்துமீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டில்  இந்திய வனப்பணி அதிகாரிகள் நால்வர் உள்பட 269 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி நீதிமன்றம் இந்தியாவிலே இதை வரை அளிக்காத  தீர்ப்பை  அளித்துள்ளது. இவர்களில் 17 பேர் கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.இந்த வழக்குகளின் குற்றவாளிகள் அனைவரும் 1992-ல் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறையில் பொறுப்பு வகித்தவர்களாவர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட வனத்துறை அதிகாரிகள் [...]

சிக்குகிறாரா தயாநிதி மாறன் !

maran

இரண்டாம் தலைமுறை அலைகற்று ஒதுக்கீடு விவகாரத்தில் ராசா,கனிமொழி போன்றோர் மீது ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை,வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது மத்திய புலனாய்வுத் துறையின் பார்வை ப.சிதம்பரம் மீதும் தயாநிதி மாறன் பக்கமும் திரும்பியுள்ளது. இந்தியாவில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்று ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில்  முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது விரைவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த [...]

அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை குறைக்க கோரும் தீர்மான நிறைவேற்றலில் கடும் அமளி !

afzal_guru

அப்சல் குருவின் தூக்குத்தண்டனையை குறைத்து  கருணை வழங்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றலில் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில்  கடும் அமளி ஏற்பட்டது.கடந்த 2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது  தாக்குதல் நடத்திய குற்றத்திக்காக அப்சல் குருவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சேக் அப்துல் ரசித் என்பவர், அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை கருணை முறையில் குறைக்கக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றும்படி, சபாநாயகரிடம் கடந்த 2-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.நேற்று புதன் கிழமை சட்டமன்றம் மீண்டும் [...]

நெதர்லாந்தில் மனித நேயப்பணியாளர்களுக்கு ஆதரவை வழங்க அணிதிரள்வோம்!

neth-court

நெதர்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து மனித நேயப்பணியாளர்கள் மீதான வழக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றதிற்கு வருகின்றது. நெதர்லாந்தில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியதாகவும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி இவர்களுக்கு நீண்டகால சிறைத்தண்டனையை வாங்கிக்கொடுப்பதற்கு சிறீலங்கா கடுமையாக முயன்றுவருகின்றது. இவர்களுக்கு எதிராக வாதிடும் நெதர்லாந்து சட்டத்தரணிகளும் பத்து முதல் 16 ஆண்டுகளுக்கு நீண்டகால சிறைத்தண்டனையை வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றார்கள். எனினும், இவர்களுக்கு ஆதாரவாக வாதிட்டுவரும் சட்டத்தரணி விக்டர் கோப், சந்தேக நபர் குற்றச் [...]

கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர் வரலாறு -[2]

murugan-2

சித்திரவதைகள் கொடூரமானவை என்பது அனுபவித்த அனைவருக்குமே தெரியும். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நான் அனுபவித்த சித்திரவதைகள் விசித்திரமானவை. ஒருவனை எப்படி எல்லாம் விதம்விதமாகச் சிதைக்க முடியும் எனக் குரூரத்தோடு யோசித்து, பரிசோதனை எலியாக என்னைப் பயன்படுத்தினார்கள்.இரவு 10 மணிக்கு ஒரு அதிகாரி என்னை அழைத்தார். ஈரக்குலை நடுங்க உயிரைக் கையில் பிடித்தபடி நின்றேன். ‘அந்தக் கொலை விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை ஒன்றுவிடாமல் என்னிடம் சொல்’ என்று மிரட்டினார். இதேபோல் எத்தனையோ தடவை அதிகாரிகள் என்னை [...]

தமிழீழப் பிரதேசத்தில் அதிகரிக்கும் சிங்களமயமாக்கல்  -  அனலை நிதிஸ் ச. குமாரன்

singala peoples in tamils area

தமிழீழத் தேசத்தின் பாரம்பரிய பிரதேசங்களில் பாரிய அளவிலான சிங்களமயமாக்கல் அதிகரிக்கின்றன. தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி நின்ற பல கட்டடங்கள் புனரமைப்பு என்கிற பெயரில் இடிக்கப்பட்டு பின்னர் சிங்கள பண்பாட்டுடைய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சேதமடைந்த தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களைத் திருத்திக் கொடுப்பதற்குப் பதிலாக இடித்துவிட்டு, தமிழர் வாழ் பிரதேசங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் என்பன புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. சிங்கள மக்களை தமிழர் பிரதேசங்களில் குடியமர்த்தும் வேலைகளும் அதிவேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற பல சிங்களமயமாக்கல் திட்டங்கள் [...]

ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளித்த கனடாவின் முயற்சி - ஜெனிவாவிலிருந்து ச. வி. கிருபாகரன்

flag globe

  இக்கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் பொழுது பல கேள்விகளும்,பழமொழிகளும் நாடகங்களும் மனதில் தோன்றுகின்றன. ஆனால் இவையாவற்றையும் எழுதுவனதால் பல பக்கங்கள் எழுதுமளவுக்கு விடயங்கள் உண்டு.ஆனால் ஒன்றை மட்டும் நாம் யாவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது “வெற்றி வந்து எம்மை அடையும் முன்னர் அதைக் கொண்டாடுவது மிகத்தவறு’. ஆகையால் யதார்த்தங்களை வைத்து இக் கட்டுரையை எழுத முனைகிறேன். ஐ.நா. மனித உமை கடந்த 12ம் திகதி ஆரம்பமாகியது உண்மை. அதே சபை யில் கியூபா, சீனா, பாகிஸ்தான் [...]

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற  வங்காரி மத்தாய் மரணம் !

HELEN

ஆபிரிக்காவுக்கான முதல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற வங்காரி மத்தாய் கடந்த செப்.26 புற்று நோயால் மரணமடைந்தார். வங்காரி மத்தாய் 71  வயது கடந்த நிலையில் புற்றுநோயால் பாத்திக்கப்பட்டு கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்,பின்னர் சிகிச்சை பலனின்றி காலமானார். சுற்றுச் சூழல் மற்றும் மனித உரிமைகள் காக்க இவரின் கடுமையான உளைபிக்கு  2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கபப்பட்டது. பெண்களை ஒருங்கிணைத்து, காடுகளை அழிப்பதற்கு எதிரான போராட்டத்தை செய்து  வந்த ‘பசுமைத் [...]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

September 2011
M T W T F S S
« Aug   Oct »
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Photo Gallery