Rste

தோழர். செங்கொடிக்கு வீரவணக்கம்

senkodi-1

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி கடந்த ஞாயிறன்று தீக்குளித்து உயிர் துறந்த காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தை சேர்ந்த செங்கொடி உடல் இன்று( 31.8.2011) மாலை அடக்கம் செய்யப்பட்டது.காஞ்சிபுரம் அருகே மங்கல்பாடியில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். செங்கொடியின் நினைவை போற்றும் வகையில் மங்கல்பாடியில் உருவச் சிலையும் திறக்கப்பட்டது.  வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன், கிருஷ்ணசாமி, சத்யராஜ், கொளத்தூர் மணி, சேரன்,ஜான்பாண்டியன், ஜி.கே, மணி, சீமான், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்,  நளினி தாயார் பத்மாவதியம்மா,  உட்பட ஏராளமானோர் [...]

ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகள் தில்லியைக் கட்டுப்படுத்தாது என்றால் தில்லியும் இனி தமிழர்நாட்டைக் கட்டுப்படுத்தாது! - அரிமாவளவன்

arimavalavan

இந்தியா என்பது இந்திய மாநிலங்களின் கூட்டாட்சிதான்.  இந்தியாவிற்குள் இருக்கிற தமிழ்த் தேசிய இனத்தின் ஒருமித்த குரலைத்தான் தமிழ்நாடு சட்டமன்றம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனைக் குறைப்பு பற்றிய தீர்மானத்தில் வெளிப்படுத்தியது.  ஆனால் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்சித் என்பவர், “அது எங்களைக் கட்டுப்படுத்தாது” என்று சொல்வது மக்களின் குரல் எங்களைக் கட்டுப்படுத்தாது நாங்கள் தான்தோன்றித்தனமாகத்தான் செய்வோம் என்றே பொருள்படுகிறது.   தமிழக மக்கள் என்றைக்கும் நீதிக்குப் புறம்பாக செயற்படுகிறவர்கள் அல்லர்.  நாங்கள் தப்பானவர்களுக்காக கையேந்தி [...]

நீதியற்ற தூக்குத்தண்டனையை  நிறுத்தக்கோரி பிரித்தானியாவில் இந்தியத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்.

poraaddam300811lon-india house001

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்பாக இன்று (30-08-2011) செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று பிரித்தானியா வாழ் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது. இன்று மாலை 3:00 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டத்தில் தமிழர்கள் மட்டுமன்றி வேற்றின மக்களுமாக பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டிருந்ததை காண முடிந்தது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தமது இளமை வாழ்வை கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் கழித்த பின்னரும், அவர்களுக்கு கொஞ்சமும் மனிதனேயமற்ற முறையில் தூக்குத்தண்டனைக்கு உட்படுத்துமாறு வழங்கப்பட்ட நீதியற்ற தீர்ப்பினை எதிர்த்து, [...]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

August 2011
M T W T F S S
« Jul   Sep »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Photo Gallery

Plugin from the creators of Brindes Personalizados :: More at Plulz Wordpress Plugins