தேசியக் கொடி ஏற்றும் கொளசல்யன் அவர்கள்
புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் அமரர்.ஜக் லெயிற்றன் அவர்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையின் இரங்கல் செய்தி.

22. ஆகஸ்ட் 2011 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்த புதிய ஜனநாயகக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர். ஜக் லெயிற்றன் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு துயருற்றிருக்கும் அனைத்து மக்களுக்கும் கனடியத் தமிழர் சார்பில் கனடியத் தமிழர் தேசிய அவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அன்னார் கடந்த காலங்களில் எம்மினத்தின் துயரங்களில் பங்குகொண்டு தோளோடு தோள் நின்று தமிழரின் உற்ற நண்பனாக வாழ்ந்து சென்றுள்ளார். அமரர். ஜக் லெயிற்றன் அவர்கள் கனடியத் தமிழ் மக்களுடன் இணைந்து போரினால் [...]
தமிழக மக்கள் இலவசங்களை எதிர்பார்க்காத நிலையை உருவாக்குவோம்: தமிழக முதல்வர்

தமிழக மக்கள் இலவசங்களை எதிர்பார்க்காத நிலையை உருவாக்குவோம் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசினார். தமிழகத்தில் அதிமுக அரசு பதவியேற்று 100 நாள் கடந்துவிட்டது. இதனைமுன்னிட்டு தமிழக சட்டப்பேரவையில் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாமக, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்யைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதிமுக அரசின் 100 நாள் நிறைவை முன்னிட்டு பேரவையில் பேசிய முதல் அமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் நிதி பற்றாக்குறை [...]
பேரறிவாளனுக்கு ஆதரவாக கடையடைப்பு செய்ய முடிவு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் அப்பாவியாய் சிக்கிக்கொண்டு 19 வயதில் சிறை சென்ற வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை சேர்ந்த தமிழாசிரியர் மகன் பேரறிவாளன். 21 ஆண்டுகளாய் சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தூக்குதண்டனையை நிறுத்தி தனக்கு கருணை காட்ட வேண்டும் என்று மனு அனுப்பியிருந்தார்கள். இரண்டு வாரத்துக்கு முன் ஜனாதிபதி அதை நிராகரித்தார். இதனை கண்டு தமிழ் உணர்வாளர்கள், தூக்குதண்டனைக்கு எதிரான இயக்கங்கள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு குரல் கொடுத்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. [...]
இன்னும் 9 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடியும்: ஹசாரே

வலிமையான லோக்பால் சட்டம் இயற்ற வலியுறுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே இன்று 9வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்நிலையில் ஹசாரே இன்று பேசுகையில், ’’லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோரி இன்று 9-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் ஒன்பது நாட்கள் ஆனாலும் எனக்கு ஒன்றும் ஆகாது. நாம் தொடர்ந்து போராடுவோம். அரசு கோரிக்கையை நிறைவேற்றும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும்’’ என்று கூறினார்.
மனித சங்கிலி போராட்டம்: பழ. நெடுமாறன் வேண்டுகோள்

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலைவழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 26-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடத்துமாறு பழ.நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தியில், ‘’தூக்குமேடையின் நிழலில் நிறுத்தப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மரண தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், சட்டப் [...]
சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையை ரத்து செய் இந்திய அரசே – சுவிஸ் ஈழத்தமிழரவை வலியோடுஇ நீதி கேட்டு நிற்கின்றனர்!

வஞ்சகரின் வலையில் சிக்கி, நெஞ்சில் வலியோடு, நினைவில் துயரோடு, உறவுகளை இழந்து, உரிமைகளை இழந்து, உறங்காது அடிமையாகிக் கொண்டிருக்கும் தமிழ் இனம் மீண்டும் நீதி கேட்டு நிற்கிறது! சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். இந்திய அரசே மரண தண்டனையை ரத்து செய்யுங்கள்! மனித உயிருக்கும் மதிப்பு கொடுங்கள்! என சுவிஸ் ஈழத்தமிழரவை வலியோடுஇ நீதி கேட்டு நிற்கின்றனர்! 1. இந்திய பிரதமரிடம் முறையிடப்பட்டதுஇ இந்திய ஜனாதிபதியிடம் மனு கொடுத்து நிராகரிக்கப்பட்டது. இனி [...]