
முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி கடந்த ஞாயிறன்று தீக்குளித்து உயிர் துறந்த காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தை சேர்ந்த செங்கொடி உடல் இன்று( 31.8.2011) மாலை அடக்கம் செய்யப்பட்டது.காஞ்சிபுரம் அருகே மங்கல்பாடியில் நடந்த இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். செங்கொடியின் நினைவை போற்றும் வகையில் மங்கல்பாடியில் உருவச் சிலையும் திறக்கப்பட்டது. வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன், கிருஷ்ணசாமி, சத்யராஜ், கொளத்தூர் மணி, சேரன்,ஜான்பாண்டியன், ஜி.கே, மணி, சீமான், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், நளினி தாயார் பத்மாவதியம்மா, உட்பட ஏராளமானோர் [...]

இந்தியா என்பது இந்திய மாநிலங்களின் கூட்டாட்சிதான். இந்தியாவிற்குள் இருக்கிற தமிழ்த் தேசிய இனத்தின் ஒருமித்த குரலைத்தான் தமிழ்நாடு சட்டமன்றம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனைக் குறைப்பு பற்றிய தீர்மானத்தில் வெளிப்படுத்தியது. ஆனால் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்சித் என்பவர், “அது எங்களைக் கட்டுப்படுத்தாது” என்று சொல்வது மக்களின் குரல் எங்களைக் கட்டுப்படுத்தாது நாங்கள் தான்தோன்றித்தனமாகத்தான் செய்வோம் என்றே பொருள்படுகிறது. தமிழக மக்கள் என்றைக்கும் நீதிக்குப் புறம்பாக செயற்படுகிறவர்கள் அல்லர். நாங்கள் தப்பானவர்களுக்காக கையேந்தி [...]

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்பாக இன்று (30-08-2011) செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று பிரித்தானியா வாழ் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது. இன்று மாலை 3:00 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டத்தில் தமிழர்கள் மட்டுமன்றி வேற்றின மக்களுமாக பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டிருந்ததை காண முடிந்தது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தமது இளமை வாழ்வை கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் கழித்த பின்னரும், அவர்களுக்கு கொஞ்சமும் மனிதனேயமற்ற முறையில் தூக்குத்தண்டனைக்கு உட்படுத்துமாறு வழங்கப்பட்ட நீதியற்ற தீர்ப்பினை எதிர்த்து, [...]

இன்னும் இரண்டு வாரங்களில் அதாவது செப்டம்பர் 12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ளது . அங்கு சிறீலங்கா புரிந்த மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்ப்பாக விவாதிக்க பட உள்ளது . மனித குல படுகொலையில் சோனியா அரசுக்கும் பங்கு உண்டு .ஐ.நா சபையில் விவாதிக்க உருவாகும் வாய்ப்பை சீர் குலைக்க இரு அரசுகளும் திட்டமிட்டு செயல் படுகின்றன . தமிழ் மக்களே சித்தித்து செயல்படுங்கள் .ஆனாலும் திசை [...]

புற்றுநோய் என்கிற கொடிய நோய் எவருக்கும் உயிர்ப் பிச்சை கொடுக்காது. இந்த நோய்க்கே பலியாகிவிட்டார் கனேடிய மத்திய அரசியலில் வலுமிக்க செல்வாக்கைப் பெற்றவரும் தற்போதைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழர்களின் வாழ்வியலை மேம்படுத்த தன்னை முழுமையாக ஈடுபடுத்தியவருமான புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜாக் லேய்டன். திங்கட்கிழமை (ஆகஸ்ட் 22) காலை 4.45 மணியளவில் தனது 61-ஆவது வயதில் ஜாக் காலமானர் என்கிற செய்தியை அவரது குடும்பத்தினர் அறிவித்தவுடன்இ பதறிப்போனார்கள் அவரது கட்சி உறுப்பினர்கள்இ ஆதரவாளர்கள் [...]

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தொடர்பில் இந்திய ஜனாதிபதி கருணை காட்ட வேண்டும். தமிழகம், இலங்கை மற்றும் உலகமுழுவதிலுமிருந்து எழுந்துள்ள மக்கள் குரல்களுக்கு மதிப்பளித்து மரண தண்டனை என்ற சட்டப்பூர்வமான கொலை தடுத்து நிறுத்தப்படவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் மன உணர்வுகளை இந்திய அரசாங்கத்திற்கு இலங்கையில் இருக்கின்ற இந்திய தூதுவர் தெரிவிக்க வேண்டும் [...]

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா இன்று (30.8.2011) சட்டமன்றப் பேரவையில், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற அறிவு ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறு இந்தியக் குடியரசுத் தலைவரை வலியுறுத்தும் தீர்மானத்தினை முன்மொழிந்து ஆற்றிய உரை : ’’இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 72-ல் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன் மற்றும் பேரறிவாளன் என்கிற [...]

20 ஆண்டு கால தொடர்ச்சியான நீண்ட நெடிய போராட்டத்திற்குக் கிடைத்துள்ள முதல் கட்ட வெற்றி இது என்று 3 தமிழர் உயிர் காப்பு இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். மூவருக்கான தூக்குத் தண்டனையை 8 வார காலத்திற்கு நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும் இது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த இடைக்கால உத்தரவு குறித்து பழ.நெடுமாறன் கூறுகையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் [...]

தூக்குத்தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீட்டு மனு மீதான விவாதத்தில் சென்னை ஐகோர்ட் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதையடுத்து, இந்த உத்தரவை வேலூர் சிறை நிர்வாகத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தங்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக்கோரி [...]

Please help us to save them from death penalty by sending mails to : Her excellency smt.pratibha devisingh patil [President of India] ——– e-mail : presidentofindia@rb.nic.in Amnesty international ——- email : press@amnestey.org.uk இங்கே காணப்படும் படத்தை உங்கள் மின்னஞ்சலில் [e-mail] இணைத்து இவர்களை உடனடியாக காப்பாற்றுமாறு படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்திய சனாதிபதி மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை ஆகியோருடைய [...]