
2009 ஆண்டு வன்னியில் மெற்கொள்ளப்பட்ட சிறிலங்கா இராணுவ நடவடிக்கையின்போது சரணடைந்த போராளிகளை படுகொலை செய்வதற்கான கட்டளையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செலாளர் கோதபாய ராஜபக்ஷ வழங்கினார் என ச்சனல் – 4 செய்தி வெளியிட்டிருக்கிறது. பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு படுகொலை புரிவதற்கான கட்டளையை ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ வழங்கினார் என யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் சாட்சியம் வெளியிட்டிருப்பதாக ச்சனல்-4 குறிப்பிட்டிருக்கிறது. மேலும், பாதுகாப்புச் செயலாளர் வழங்கிய கட்டளையானது இராணுவத்தினர் [...]

யூலை 1983 இன் பொழுது தமிழ் மக்கள் மீது அநியாயமாக நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்கள் இலங்கை அரசினாலும் சிங்கள மக்களினாலும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன. யூலை இனக்கலவரத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வை, வீட்டை, சொத்தை, நிம்மதியை, உறவினரை இழந்து தவிர்தனர், இன்றும் தவிர்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான கறுப்பு யூலையினை தமிழ் மக்கள் மனதில் நிறுத்தி ஆண்டு தோறும் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் மார்க்கம் மாநகரில் தமிழ் இளையோர் அமைப்பினால் வீடு வீடாக சென்று பரப்புரை நிகழ்வை மேற்கொண்டனர். [...]

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைகளை நடத்தியது புலிகள்தான் என்று பழிபோட்டது போல், அதற்கு முன்பே 1985 ஆம் ஆண்டில் இரண்டு நாடாளுமன்ற தலைவர்கள் கொல்லப்பட்டபோதும், புலிகள் மீதே வீண் பழி சுமத்தினர். கொல்லப்பட்ட வி.தர்மலிங்கம், எம்.ஆலால சுந்தரம் என்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்தனர். தர்மலிங்கம் 23 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, தமிழர்களுக்கு தொண்டு செய்தவர். அதேபோல் ஆலாலசுந்தரம் நியமன முறையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மிகவும் நயவஞ்சகமாக இவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். [...]

பன்னாட்டு நீதிமன்றம் ராஜபக்சேவை விசாரிக்க கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பெங்களூர் தமிழ்ச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெங்களூர் தமிழ்ச்ச சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம், துணை தலைவர் ராசு.மாறன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியது: இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசின் ஆதரவு இல்லாத நிலை உள்ளது. எனவே, இதை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். இலங்கை தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை மத்திய அரசுக்கு உணர்த்தி நடவடிக்கை எடுக்கும் வகையில், தமிழின படுகொலை தொடர்பான ஆவண [...]

பிரித்தானியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்வொன்றில் திரு.சுமத்திரன் அவர்கள் புலம்பெயர் மக்களின் போராட்டங்களை விமர்சித்தது மற்றும் சிங்கள மக்கள் ஏற்கும் தீர்வை மட்டுமே பெறவேண்டும் எனவும் போர்க்குற்றங்கள் பற்றிக் கதைத்து சிங்களவர்களை நாம் கோபப்படுத்தக் கூடாது எனவும் கூறியிருக்கின்றார். பல நாடுகளில் இதே கருத்தை தெரிவித்திருக்கின்றார். திரு.சுமத்திரன் அவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் ஆகிய நாம் எமது கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு திரு.சுமத்திரன் அவர்கள் தெரிவித்த கருத்தை திரும்பப் பெறவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம். சிங்கள [...]

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் இருந்து பாரீஸ் நகரத்தை நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆறுபேரினுடைய ஈருருளிப்பயணம். 25.07.2011 திங்கட்கிழமை ஈருருளிப்பயணம் மூன்றாம் நாளில் மிகவும் ஆர்வத்துடன் தொடரப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஸ்ராஸ்பூர்க் நகரில் இருக்கும் DNA என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்ததுடன், அதேபோல தொடர்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் பத்திரிகையாளர்கள் வருகை தந்து செய்தி சேகரித்து செல்வதுடன் பயணத்தை மேற்கொண்டுள்ள ஆறு பேருக்கும் மிகுந்த உற்சாகத்தையும் வழங்கிவருகிறார்கள். மழையையும், காற்றையும் எதிர்த்து தொடரும் பயணத்தில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும். [...]

கடந்த இரு வருடங்களுக்கு முன் யுத்த பூமியாக இருந்த வன்னி தற்போது புத்தபூமியாக மாற்றமடைந்து கொண்டு வருகின்றது. அரச மரங்கள் அரசாட்சியின் சின்னங்களாக எங்கும் முளைவிடச் செய்யப்பட்டுள்ளன. இதற்கும் அப்பால் பெரிய மரங்கள் வேருடன் இடம் மாறி அமைந்து புத்தருக்கு நிழல் கொடுக்கின்றன. இவ்வாறு அரச மரத்துடன் அரசாட்சி வேர் பதித்து விரவி நிற்க, “ஒரு நாடு ஒரு தேசம்” என்ற இலக்கை நோக்கி வன்னி நிலம் அடிக்கப்பட்டு நகர்த்தப்படுகின்றது. அரச மரத்துடனான அரசாட்சியுடன் ஒரு தேசம், [...]

இலங்கையில், சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தாயகமாகம் வடக்கு கிழக்கு மாநிலங்களில், பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. இந்தப் 17 மாகாண கவுன்சில்களைக் கைப்பற்றி உள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இலங்கை நாடாளுமன்றத்துக்கு 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 இடங்களில் [...]

தலாய் லாமா ரோலிங் ஸ்டோன் இதழுக்கு அளித்த பேட்டியில், தன்னை வெறுக்கும் சீன தலைவர்களின் மூளை இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை என்றும், அவர்களின் செயல்கள் “குழந்தைத்தனத்தை “ காட்டுவதாகவும் , சீனாவின் ஆட்சியாளர்கள் திபெத்தை எதிர்மறை சக்தியாக கருதுவதாகவும், ஆனால் இதில் எந்த அர்த்தமும் கிடையாது என்றார் . “பொதுவாக, மனிதர்களின் , மூளையின் ஒரு பகுதி பொதுவான உணர்வை உருவாகிறது. ஆனால் சீன தலைவர்களின் மூளையில் அந்த பகுதி விடுபட்டுள்ளது,” என்று கூறினார். மேலும், திபெத்தியர்கள் [...]

சர்வதேச நீதிமன்றம் அல்லது உலக நீதிமன்றம் என அழைக்கப்படும் ஐ.சி.ஜே.இ 1946 ஆம் ஆண்டில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது.உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் சில சர்ச்சைகளை இவ் ஐ.சி.ஜே. தீர்த்து வருகிறது. இவ் ஐ.சி. ஜே. நிறுவப்படுவதற்கு முன்னர் 1899 ஆம் ஆண்டு சி.பி.ஏ. என்ற நீதி நிறுவனம் 1922 தல் சி.பி.ஐ.ஜே. என்ற சர்வதேச நீதி மன்றம் நாடுகளுக்கிடையேயான சர்ச்சைகளை பேச்சுவார்த்தை விசாரணைஇ மத்தியஸ்தம் ஆகிய முறைகள் மூலம் தீர்த்து வந்துள்ளன. சில ஆய்வாளர்கள் உட்பட பலர் [...]