
இலங்கைக்குள் பல ஆண்டுகளாகவே உள்நாட்டு யுத்தம் நடந்துவருகிறது. ஆனால் நான்காவதுஈழப் போரின் கடைசிக் கட்டத்தில், நடந்த கொடூரமான போர்க்குற்றங்கள் குறித்து, சர்வதேசச் சமூகத்தின் ஒரு பகுதியினர் கவலையடைந்திருக்கின்றனர். இது குறித்து விசாரிக்க, ஐ.நா.சபையின் செயலாளர் நாயகம், நிபுணர் குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழு ஒரு விசாரணைக் குழு அல்ல; ஆலோசனைக் குழு மட்டுமே என்றாலும் இந்தக் குழு அமைக்கப்பட்டது இலங்கையிலும்பல்வேறு நாடுகளிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஆனால் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இந்த அறிக்கை ஆரோக்கியமான விவாதம் எதையும் ஏற்படுத்தவில்லை.அம்மாதிரி [...]

யுத்தம் காரணமாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் முழுமையாக மீளக்குடியமர்த்தப்படாத நிலையில், வடக்கு மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்காது என்று கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இது குறித்து தேர்தல்கள் ஆணையாளருடனும், அரசுடனும் பேச்சு நடத்தவுள்ளோம் என்றார் அவர். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: போரால்தான் வடக்கில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இடம்பெயர்ந்து, முகாம்களில் பலர் இருக்கின்றனர். அதேபோன்று, இடம்பெயர்ந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பலர் [...]

கடந்த 23-07-2011 அன்று தமிழர் தாயகப் பிரதேசத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சிங்கள பௌத்த பேரினவாதக் கட்சிகளையும் அதன் துணைக் குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளதன் மூலம் தமிழ்த் தேசத்தின் தனித்துவத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன் தமிழ்த் தேசம் வேறு சிங்கள தேசம் வேறு என்பதனையும் மீளவும் வலியுறுத்தியுள்ளனர். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இரண்டு தேசங்களும் வேறுபட்டது என்ற அடிப்படையிலேயே சர்வதேச சமூகம் தமிழ் மக்களது இனப்பிரச்சியையை அணுக வேண்டும் என்பதே தமிழ் மக்களது விருப்பம் என்பதனையும் [...]

கலைஞர் டிவி சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டவிதியின் கீழ் கொண்டுவர அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துவருகிறது. ரூ 215 கோடி மதிப்பிலான கலைஞர் டிவி சொத்துக்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்த சொத்துக்கள் உள்ளன என்று அமலாக்கப்பிரிவு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கலைஞர் டிவியில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளன. அதன் நிர்வாக [...]

இந்திய ராணுவ வீரர்கள் தற்போது பிரவுன் நிறத்திலான கேன்வாஸ் பி.டி. ஷுக்களைப் யன்படுத்தி வருகின்றனர். இதை அணிந்து கரடு முரடான மற்றும் மலைப் பகுதிகளில் நடக்க ராணுவ வீரர்கள் சிரமப்படுகின்றனர். இதையடுத்து நெகிழ்வு தன்மை கொண்ட உயர் தரத்திலான ஷுக்களை தயாரித்து வழங்க, ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 8 லட்சம் ஜோடி ஷுக்கள் தயாரிப்பதற்கான காண்டிராக்ட் விட மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இந்த ஷுக்கள் தயாரிக்க ஏராளமான பசு மாட்டு தோல்கள் தேவைப்படும் [...]

லிபியாவில் அதிபர் கடாபியின் ராணுவத்தின் மூத்த அதிகாரியாக இருந்தவர் ஜெனரல் அப்துல் பதாயூனஸ். தற்போது இவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்களின் படை கமாண்டராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் பெங்காசி நகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். எனவே அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த தகவலை கிளர்ச்சியாளர்களின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது. அவரது மரணத்தை தொடர்ந்து பெங்காசி பகுதியில் 3 நாள் [...]

யாழ் மாவட்டத்தின் எம்பிக்கள் தொகை ஒன்பதிலிருந்து 5 ஆக குறைக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு இருந்தாலும்கூட, இதன் பின்னணி அரசியல் அடிப்படை கொண்டதாகும். எனவே அரசியல் ரீதியான தீர்வு காணப்படும் வரை இந்நடவடிக்கை இடை நிறுத்தப்படவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ் மாவட்டத்தில் 2009 வரை 816,005 வாக்காளாகள் பதிவாகி இருந்தனர். இதில் 331,214 பெயர்கள் [...]