தேசியத் தலைவர்
மீனவர்களை விடுதலை செய்யும் வரை வேலை நிறுத்தம்: ராமேசுவரம் மீனவர்கள் அறிவிப்பு

ராமேசுவரத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சில நேரங்களில் கடற்படையினரின் தாக்குதலுக்கு மீனவர்கள் பலர் பலியாகியும் உள்ளனர். மத்திய மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்நிலையில் தமிழக கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அவர்களது 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து [...]
கருணாகுழுவின் நினைவுத் தூபியை பொது மக்கள் அடித்து நொருக்கினர்!

மட்டக்களப்பு சந்திவெளிப் பகுதியில் கருணா குழுவினரால் நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை சந்திவெளி பிரதேச மக்கள் அடித்து நொருக்கியுள்ளனர். மட்டக்களப்பு சந்திவெளி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருந்த இந்த நினைவுத் தூபி வாகரையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் கருணாகுழுவிற்கும் இடையில் நடைபெற்ற ஆயத மோதலின் போது உயிரிழந்த கருணாகுழு உறுப்பினர்களின் நினைவாக விநாயகமூர்த்தி முரளிதரனால் (கருணா) அமைக்கப்பட்டிருந்தது. இன் நினைவுத் தூபியையே சந்திவெளி மக்கள் நேற்றுக் காலை அடித்து நொருக்கியுள்ளனர். ஏற்கனவே இந்த இடத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நினைவுத் தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும் [...]
தேசியக் கொடியுடன் இளந்தளிர் நிகழ்வு உடைத்தெரியப்படும் விலங்கு - இளையோர் அமைப்பு!

யராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினாரால் நேற்று(19.06.2011) இளந்தளிர் நிகழ்வு நான்காவது தடவையாக “இளந்தளிர் 2011” எனும் பெயரில் மண்டபவம் நிறைந்த மக்களுடன் மேற்கொள்ளப்பட்டது. மாலை 4 மணி தொடக்கம் “ஈழத்தமிழரின் அடையாளம்” கண்காட்சி மக்கள் பார்வையிற்காக வைக்கப்பட்டிருந்தது. இதில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நேரில் கண்ட சாட்சியால் வரையப்பட்ட முள்ளிவாய்கால் சோகக் காட்சிகள், தமிழீழ மண்ணினால் வரையப்பட்ட தமிழீழ வரைபடம், இறுதிக்கட்ட போரில் முள்ளிவாய்காலில் உயிர்நீத்த மக்களின் இரத்தம் உறைந்த மண், பழைய காலத்தில் உணவு செய்முறைகளை குறித்து [...]
துணிச்சலான தீர்மானம் !

இனஅழிப்பு மொத்தமாக நடாத்திமுடிக்கப்பட்டு இரண்டுவருடங்களுக்கும் மேலாகின்றது.அதன்பின்னரும் இன்றுவரை வேறுவேறு வடிவங்களில் இனஅழிப்பை சிங்களம் எந்தஒரு தயக்கமம் இல்லாமல் மெதுமெதுவாக நடாத்திக்கொண்டே இருக்கின்றது. கேட்க நாதியற்ற இனமாக எமது மக்கள் மிருகங்களைப் போன்று நடாத்தப்பட்டு வருகின்றனர். இவை எல்லாவற்றையும் நடாத்திக்கொண்டே சிங்களத்தின் அரச அதிபரும் பரிவாரமும் உலக சபைகளில் உரைகளையும், உலாக்களையும் (இங்கிலாந்து தவிர்ந்த) நடாத்தி வருகின்றனர். தகவல்தொழில்நுட்பம் உலகத்தை ஒரு சிறுகிராமம்போல கைக்குள் கொண்டு வந்துள்ளதாக பெருமை பேசினாலும் எமது மக்கள்மீதான படுகொலைகள் மட்டும் வெளிச்சத்துக்கு பெரிதாக [...]
ஓ போடு: பான் கீ மூனை வாழ்த்தும் நாடுகளில் சிறிலங்கா முன்னணியில் அனலை நிதிஸ் ச. குமாரன்

சிறிலங்கா அரச தலைவர்கள் மற்றும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பிற கட்சி உறுப்பினர்கள் கடந்த ஒரு வருட காலமாக ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனை அவதூறாக பேசி வந்தார்கள். பல காலமாகசிறிலங்காவின் உற்ற நண்பனாக இருந்த மூனை கடந்த ஒரு வருடமாக இழிவாக வர்ணிக்க காரணம் என்னவெனில் அவர் மூவர் குழுவை அடங்கிய விசாரணைக் குழுவை நியமித்ததுதான். சிறிலங்கா அரச தலைவர்கள் ஐநாவின் மூவர் அடங்கிய குழுவின்அறிக்கையை தொடர்ந்தும் ஏற்க [...]
இலங்கை நிறுவனங்கள் சென்னை கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது: செந்தமிழன் சீமான்

சென்னை நந்தம்பாக்கத்தில் தொழில், வணிக கண்காட்சிகள் நடத்தப்படும் சென்னை வர்த்தக மையத்தில் வரும் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி (21st Edition of India’s Premier Exhibition on Interior Design, Furniture, Furnishing and Décor Accessories) நடைபெறவுள்ளது. ஜாக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் எனும் நிறுவனம் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது. 21வது ஆண்டாக நடைபெறும் இந்த பன்னாட்டு கண்காட்சியில் [...]