ஏமன் நகரத்தை கைப்பற்றிய அல்கய்தா!

ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவின் 33 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற னர். இதைத் தொடர்ந்து நடத்தப் பட்டு வரும் ராணுவ தாக்குதலில் சுமார் 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று அங்குள்ள ஷிஞ்சியர் என்ற நகரத்தை அல்கய்தாவினர் 200 பேர் திடீரென முற்றுகையிட்டனர். தகவல் அறிந்ததும் ஏமன் ராணுவத்தினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் அந்த நகரத்தை அல்கய்தாவினர் கைப்பற்றினர். [...]







