Rste

ஏமன் நகரத்தை கைப்பற்றிய அல்கய்தா!

yeman -map

ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவின் 33 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற னர். இதைத் தொடர்ந்து நடத்தப் பட்டு வரும் ராணுவ தாக்குதலில் சுமார் 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று அங்குள்ள ஷிஞ்சியர் என்ற நகரத்தை அல்கய்தாவினர் 200 பேர் திடீரென முற்றுகையிட்டனர்.   தகவல் அறிந்ததும் ஏமன் ராணுவத்தினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் அந்த நகரத்தை அல்கய்தாவினர் கைப்பற்றினர். [...]

ஒட்டாவா பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் நடத்திய ‘G for Genocide’

canada-tamils-tyo-30 (4)

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் சிங்கள இனவாத அரசின் தமிழின அழிப்பு மாதத்தினை நினைவுகூர்ந்து,  ஒட்டாவாவில் உள்ள கார்ல்டன் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் நடத்திய ‘G for Genocide’  எனும் விழிப்புணர்வுப் போராட்டம் நகரின் பல முக்கிய இடங்களிலும் இடம்பெற்றது. கார்ல்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பல தமிழ் மாணவர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர். ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனவழிப்பு, மானுடத்துக்கெதிரான குற்றங்கள் போன்றவற்றைக் கண்டித்தும்,  தமிழர் தாயகத்தில் தொடரும் அடக்குமுறைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியும் வேற்றினத்தவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாகவும் [...]

இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான் – என்ன செய்யப்போகின்றது இந்தியா?!

india-pakistan-mahinda

மனித உரிமைக்கூட்டத்தில் இலங்கையில் ஏற்பட்ட மனிதப் பேரழிவுகளுக்கு உரிய விசாரனைகள் வேண்டும் என வாதங்கள் முன்வைக்கப்பட்போது. எந்த நாடும் எதிர்ப்புத் தெரிவிக்காத போது பாகிஸ்தான் மட்டும் இலங்கை விவகாரம் முடிந்துபோன விடயம் என இலங்கையின் இனப்படுகொலைகள் போர்க்குற்றங்களுக்க ஆதராவாக குரல் கொடுத்துள்ளது.   பாகிஸ்தானின் பல தீவிரவாத அமைப்புக்கள் இலங்கையில் பயிற்சி பெற்றுவருவதாக பல உலக உளவுத்துறைகள் தகவல் வழங்கியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.   சர்வதேச விசாரனைகள் என வந்தால் பாகிஸ்தானின் இந்தியாவிற்கு எதிராக இலங்கையில் எடுத்து [...]

மத்திய கிழக்கில் குவிந்துள்ள மேற்குலகின் பார்வை -இதயச்சந்திரன்

G8-France-2011

உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் மாநாடொன்று பிரான்ஸிலுள்ள டியூவிலில் (DEAUVILLE) நடைபெறுகின்றது.இந்த ஜி-8 (G-8) கூட்டில், பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா, போன்ற நாடுகள் இருக்கின்றன.   இதில் கலந்து கொள்ளும் நாடுகளின் பூகோள நலன்கள், பிராந்திய அளவில் மாறுபட்டுக் காணப்பட்டாலும், ஜப்பானைத் தவிர்த்து, ஏனைய நாடுகள் மேற்குலக வலயத்துள் இருப்பவையாகும். அமெரிக்க தேசமானது, இம் மாநாட்டில் முன் வைக்கும் கோரிக்கைகள், தனது உலக ஆதிக்கத்தை மீளவும் கட்டியெழுப்பும் வகையில், ஐரோப்பிய நாடுகளின் [...]

சிங்கள மட்டையாட்ட அணிக்கு எதிராக நடாத்தப்பட்ட போராட்டம்

tyo-cadiff3

நேற்று (28-05-11) பிரித்தானியவில் காடிப் (Cardiff) எனுமிடத்தில் சிறிலங்கா கிரிக்கட் அணிக்கு எதிராக பிரித்தானிய தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் காலை 10மணிக்கு விளையாட்டு மைதானத்திற்கு வெளியே நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மைதானத்திற்கு போட்டியைப் பார்வையிடச் சென்ற பார்வையாளர்களை மறித்து சிறிலங்கா அரசானது எம்மக்களுக்கு இழைத்த கொடுமைகள் இனவழிப்பு போர் மற்றும் இன்றும் விலங்குகள்போல் எம் மக்கள் அடைக்கப்பட்டிருப்பதும் அடிமைகள் போல் நடத்தப்படுவது பற்றியும் தெரிவிக்கப்பட்டது. சிறிலங்கா கிரிக்கட்அணியை தடைசெய்யவேண்டும் என்றும் சிறிலங்காவிற்கு செல்வதையும் [...]

ஐ.நா  அறிக்கை – இந்தியா நிலை என்ன?

india-flag

இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் செயல்படுமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாக டில்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கை தொடர்பான கருத்தரங்கம் டில்லி தமிழ் மாணவர் அமைப்புகள் சார்பில், டில்லியில் நடைபெற்றது. அதில் பேசும்போது, நீதிபதி சச்சர் இந்தக் கருத்தை வலியுறுத்தினார். ஐ.நா. குழு இலங்கைக்கு வந்து விசாரணை [...]

பி.பி.சி வெளியிட்ட பரமேஸ்வரன் ஆவணப்படம் [ video]  

bbc-parameswaran

பின்லேடன் பதுங்கி இருந்த வீட்டில் அமெரிக்க உளவுப்படை சோதனை

laden - house

பாகிஸ்தானில் அல்-காய்தா தலைவர் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட வீட்டில் அமெரிக்க உளவுப்படை  (சிஐஏ) அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.   பாகிஸ்தானில் அல்-கொய்தா இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடனை கடந்த 2-ந்தேதி அமெரிக்க படை வீரர்கள் சுட்டுக்கொண்றனர். பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பின்னர், அவன் பதுங்கி இருந்த வீட்டில் இன்று அமெரிக்க உளவுப்படையினர்  (சிஐஏ)  தீவிர சோதனை நடத்தினார்கள்.   அவர்களுடன் பாகிஸ்தானின் உளவுப்படையினரும் சென்று இருந்தனர். 3 மாடிகளைக் கொண்ட அந்த மாளிகையில், இந்த சோதனை 6 [...]

எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிப்போம்: ஜெயலலிதா

jayalalitha

சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.   14-வது சட்டப் பேரவையின் புதிய தலைவராக டி.ஜெயகுமாரும், துணைத் தலைவராக தனபாலும் தேர்ந்தெடுக்கப்பட்டதை வரவேற்று இருவரையும் வாழ்த்தி சட்டப் பேரவையில் ஜெயலலிதா பேசியது:   மக்களாட்சி முறையை செயல்படுத்தும் மன்றமாக சட்டப் பேரவை விளங்குகிறது. ஓர் அரசை தங்கு தடையின்றி நடத்தி, பலதரப்பட்ட கட்சிகளின் கருத்துகளைப் பெற்று மக்கள் பயன்பெறும் வகையில் சட்டங்களை இயற்றி ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் செயல்படுகின்ற மன்றமாக [...]

விலைவாசி உயர்வு, ஊழல் பெருக காங்கிரஸ் அரசே காரணம்

chandrababu_naidu

இந்தியாவில் ஊழலுக்கும், அத்தியாவசிய பொருள்கள் விலை உயரவும் காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்று தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் என். சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இவை இரண்டையும் நாட்டிலிருந்து வெளியேற்ற ஒருங்கிணைந்த போராட்டம் அவசியம் என்று அவர் கூறினார். ஒவ்வொரு மாநிலத்திலிருந்து படிப்படியாக காங்கிரஸ் கட்சியை வெளியேற்றுவதன் மூலம்தான் நாட்டில் ஊழலற்ற ஆட்சியை உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.   தெலுங்கு தேசம் கட்சியின் ஆண்டு கூட்டம் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் [...]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

May 2011
M T W T F S S
« Apr   Jun »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Photo Gallery