
தமிழீழ விடுதலைப்புலிகளைச் சுதந்திரப் போராளிகள் என்றும் உலகத்திலேயே ஒழுக்கமானவர்கள் என்றும் தெரிவித்துள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் தருஸ்மன் அறிக்கையை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது? இப்படி அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று கேள்வி எழுப்பினார். அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பான அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் [...]

தாய்லாந்து- கம்போடியா இடையே கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த தற்காலிக போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கம்போடிய அரசு செய்தி தொடர்பாளர் பெய்ஷிப்ஹான் தெரிவிக்கையில், தாய்லாந்து- கம்போடிய எல்லையில் உள்ள போனோபெம் டான்கிராக் பகுதியில் பழமையான கோயிலை ஆக்கிரமிப்பதில் கடந்த வியாழக்கிழமை முதல் சண்டை ஏற்பட்டு வந்தது. உள்நாடடு அரசியல் காரணங்களுக்காக இந்த சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் இரு தரப்பிலும் சுமார் 40 நிமிடங்கள் நடந்த பேச்சுவார்த்தையின் படி [...]

ஏர்-இந்தியா விமான பைலட்கள் ஸ்டிரைக் இரண்டாம் நாளாக நேற்றும் தொடர்ந்தது. பைலட்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. நேற்று 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும். ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி சம்பள உயர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏர்-இந்தியா விமான பைலட்கள் நேற்று முன்தினம் திடீர் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால், நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டது. 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து [...]

சிங்களஅரசு இந்திய அரசுக்கு வழங்கிய சில உறுதிமொழிகளை அடுத்து சிங்கள அரசுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக செய்திகள் கூறுகின்றன. சிங்கள அரசு இந்திய அரசுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றினால் மகிந்தவுக்கு ஆதரவு கொடுப்பதாக மன்மோகன் சிங் அவர்கள் தொலைபோசியூடாக தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதாவது போர் முடிவுற்ற பின்னர் இந்தியாவுக்கு வழங்கிய உறுதிமொழிகளே அவைகள். இராஜீவ் காந்தியோடு அமர்ந்து கையெழுத்திட்ட உறுதிமொழிகளையே சிங்கள அரசு அலட்சியம் செய்யும் போது வெறும் வாய் வார்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு சிங்கள அரசுக்கு [...]

சிறீலங்கா படைகளால் அடித்து, வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேசின் உடலத்தை அவரது மனைவி வத்சலாதேவி துரைராஜசிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார். அவருடைய ஒலிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது நன்றி: ஈழம்டெய்லி இணையம்

சிறிலங்கா அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த சர்வதேச சமூகத்திடம் ஆதரவு கோரும் கையெழுத்து போராட்டம் கனடா மொன்றியலில் ஆரம்பமாகியது. போர்க்குற்றம், இனஅழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றம் புரிந்து வரும் சிறிலங்கா அரசை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்டும் கையெழுத்துப் போராட்டம் நேற்று மாலை (27.04.2011) கனடாவின் மொன்றியல் மாநகரில் ஆரம்பமாகியது. நகரின் முக்கிய தொடரூந்து நிலையங்களில் ஆரம்பமாகிய இப்போராட்டம் தொடர்ந்து தினமும் நகரின் மக்கள் செறிவாக சென்றுவரும் இடங்களையும், கடைத்தெருக்களையும், பாடசாலைகள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை [...]

கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் வன்னியில் நிறைவடைந்த போரில் சிறீலங்கா அரசு எவ்வாறு தனது முழு வழங்களையும், தனக்கு ஆதரவான நாடுகளின் உதவிகளையும் பயன்படுத்தியதோ, தற்போது மீண்டும் ஒரு இராஜதந்திர போரை வெல்வதற்காக அது தனது முழு வழங்களையும் பயன்படுத்தி வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்துவதற்கு முன்னர் அதில் காணப்பட்ட முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 12 ஆம் நாள் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்ட [...]

சிங்கள இராணுவத்தினர் ஊடாக தற்போது வெளிந்துள்ளது புதிய போர்க்குற்ற ஆதாரம். துரைராஜசிங்கம் தம்பிராஜா என்றழைக்கப்படும் கேணல் ரமேஸ் அவர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்ட படமே தற்போது வெளிவந்துள்ளது. சில நாட்கள் முன்னர் வெளிவந்த கானொளியில் கேணல் ரமேஸ் அவர்களை சிங்கள இராணுவம் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சி வெளியாகி இருந்தது. அந்தக் காட்சியில் அவர் நீலம் மற்றும் வெள்ளை நிறமுடைய சரம் ஒன்றும் வெள்ளை நிறமுடைய சட்டை ஒன்றும் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் [...]

பேரினவாத சிங்கள அரசுகளால், ஈழத் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்டது இன அழிப்புத்தான் என்கிற வகையில் அமைந்துள்ளது, கசிந்துவரும் ஐ.நா.நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கை. சிறீலங்கா அரசினால், தமக்குச் சார்பான ஊடகங்களினூடாகக் கசிய விடப்பட்ட அறிக்கையின் சில பக்கங்களின் நம்பகத்தன்மை குறித்தும் சிலர் கேள்வி எழுப்புகின்றார்கள். இந்த அறிக்கையை மகிந்த ராஜபக்ச அரசு, ஊடகங்களினூடாக வெளிப்படுத்தியதன் சூத்திரத்தை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இதை வெளியிடுவதனூடாக சிங்கள மக்களை இதற்கெதிராக அணிதிரட்டலாம் என்பதுதான் மகிந்தரின் திட்டம். அரசின் மந்திரி பிரதானிகள், [...]

இன்று ஊடகங்களில் வெளியான போர்குற்ற படங்களில் விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான கேணல் பாணு அடையாளம் காணப்பட்டுள்ளார். பல வெற்றிச் சமர்களங்களில் களமாடிய தளபதி பாணு இனவெறி கொண்ட சிங்கள இராணுவத்தினரால் சித்திரவதைப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்பது மிகவும் வேதனைக்குரியதே. 2008 இல் மன்னார் களமுனையில் சாதனை புரிந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது கேணல் பாணு “”எமது பலத்தை நிரூபிக்கும்போது சர்வதேசம் வலிந்து உதவும்”” என தெரிவித்திருந்தார். அங்கு அவர் மேலும் உரை [...]