Rste

துனிசியா நாட்டில் சிறைகளில் இருந்து கைதிகள் 800 பேர் தப்பி ஓட்டம்

africa-prison

ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அதிபர் பென்அலிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதை தொடர்ந்து அவர் பதவி விலகினார். போராட்டத்தின் போது சிறைகளில் இருந்த சுமார் 11 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடி விட்டனர்.   பின்னர் அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். கடும் எச்சரிக்கைக்கு பின்னர் மேலும் 2 ஆயிரம் பேர் தானாக சரண் அடைந்தனர்.அதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.   [...]

அடுத்த போர்க்குற்ற போர்க்குற்ற ஆதாரம் – சரணடைந்த பொருளியல் துறை பணிப்பாளர் படுகொலை

suhunan

இறுதிக் கட்டப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரை பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கமைய கொடூரமாக படுகொலை செய்ததற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது இன்னுமொரு ஆதாரமும் வெளிவந்துள்ளது.   கேணல் ரமேஷ் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான ஆதாரங்கள் கடந்த புதன்கிழமை வெளிவந்துள்ள நிலையில், தற்போது விடுதலைப்புலிகளின் பொருளியல் ஆலோசனை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றிய திலக் என அழைக்கப்படும் சிவலிங்கம் சுகுணன் என்பவரையும் இராணுவம் படுகொலை செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது.   இந்தப் புகைப்படங்கள் [...]

கனேடியத் தமிழர்கள் தமது இருப்பை பலப்படுத்தும் நேரமிது - அனலை நிதிஸ் ச. குமாரன்

election-canada

கனடாவில் சிறுபான்மை அரசாங்கத்தை நடத்தி வந்த பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதை அடுத்து,கனேடிய அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்டது. நம்பிக்கையில்லா பிரேரணையைத் தொடர்ந்து, ஹார்ப்பர், கனேடிய ஆளுநர் டேவிட் ஜோன்ஸ்டனைச் சந்தித்துநாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஜோன்ஸ்டனும், நாடாளுமன்றத்தை மார்ச் 26-ஆம் நாள் கலைத்து மே 2-ஆம் நாள் (திங்கக்கிழமை) தேர்தல்நடைபெறும் என்று அறிவித்தார். இதனடிப்படையில், தேர்தல் அடுத்த சில தினங்களில் இடம்பெற இருக்கிறது. கனேடிய தமிழர்களின் [...]

சுதந்திரம் தானே கேட்டோம்

kavithai3

சிங்களனோ பலோ பலோவென(நாயே நாயே) நிர்வாணமாக்கி நெற்றி பொற்றில் தோட்டாவை சுமக்கச் செய்தான் உயிர்காக்க வருமென்றிருந்த செஞ்சிலுவை சங்கமோ ஆடை அவிழ்க்கப்பட்டு பூட்சு கால்களால் மிதிப்பட்டு கிடந்த எம்பிணங்களை சுமக்க வந்தது,கணக்கெடுப்பதற்காய். குருதியில் எம்மண் சிவக்க கடைசி வரை உதவ வருமென்றிருந்த இந்தியாவோ,சிங்கள மாந்தர்களுக்கு சிவப்பு கம்பல வரவேற்பளித்து பகற்கனவாக்கியது ஈழக்கனவை. இலட்சக்கணக்கில் செத்து கிடந்தோம் ஐ.நா.வோ ஆயிரக்கணக்கில் மாண்டு கிடந்தார்களென்று அறிக்கை வெளியிடுகிறது மனிதநேய கடமைக்காய், போர்க்குற்ற விசாரணையையோ போர் நடத்திவர்களிடமே கையளிக்கிறது ஐ.நா. சபை. [...]

மே தின ஈகிகளின் நினைவைத் தாங்கி தொடர்ந்து உழைப்போம் – செந்தமிழன் சீமான் மே தின செய்தி.  

new logo naamtamilar

சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை நாள் மே தினம். நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை. ஓய்வு ஒழிச்சல் அற்றுபலமணிநேரம் அந்த தொழிற்கருவிகளுக்கு இணையாய் சுழன்று உழைத்த உழைப்பாளர்களோடும் தான் தொடங்கியது. இருபது மணி நேரத்திற்கும் மேலாக ஆலைகளில் நசுங்கிய உழைப்பாளர்கள் எட்டுமணிநேரவேலை என்ற உரிமைக்காக போராடினார்கள். 1886ஆம் ஆண்டு மே 1ஆம் நாள் எட்டுமணிநேர வேலைக்காக அமெரிக்க தொழிலாளர்கூட்டமைப்பு அறிவித்த நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டமே மேநாள் என்ற உழைப்பாளர் உரிமை [...]

போர் குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் சர்வதேச விசாரணை அவசியம் - செண்பகத்தார்

susan rice

214 பக்கங்களை உள்ளடக்கிய ஐநா நிபுணர் குழு அறிக்கை எவ்வித தணிக்கைக்கும் உட்படாமல் வெளிவந்துள்ளது. இலங்கை அரசும் அதன் நட்பு நாடுகளும் அது வெளிவராமல் தடுப்பதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. தனது நம்பகத்தன்மையையும் ஐ.நா.வின் பயன்பாட்டையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு இருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் தீவிரமடைந்த காலத்தில் தனது பொறுப்புக்களை அவர் அலட்சியப்படுத்தினார். சர்வதேச சட்ட நிபுணரான அமெரிக்க இல்லினோய் பல்கழைக் கழகப் பேராசிரியர் பிரான்சிஸ் போயில் (Francis A [...]

சூடாகும் கனடியத் தேர்தல் அரங்கம்

Canada-Election-2011

ஏழு ஆண்டுகளில் நான்காவது முறையாக கனடியப் பொதுத்தேர்தல் மே 2ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது நாற்பத்தியோராவது அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலாகும் கட்சித் தலைவர்களின் பிரசாரமும் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. இம்முறை தேர்தலில் பரபரப்பு என்னவென்றால் கட்சி நிலைவரங்களின் புள்ளிவிபரக் கணக்கெடுப்புகள் தரும் திடுக்கிடும் கணிப்புகள்தான். இரண்டாவது இடத்தில் இருந்த லிபரல் கட்சியை என்.டி.பி. மூன்றாவது இடத்துக்குத் தள்ளிவிட்டது என்பதாகும். தற்போது லிபரல் கட்சி ஆட்சியைப் பிடிப்பது என்ற கதை போய் இரண்டாவது இடத்தைத் தக்கவைப்பதற்கு போராடுகிறது. ஆனால் [...]

இது முதலாவதும் அல்ல இதுதான் இறுதியும் அல்ல – குணம்

kallarai3

  அந்தப் புகைப்படங்களை பார்த்தபோது மனது நொருங்கிப்போவது உண்மைதான். அந்த சதுப்பு நிலத்தின் ஆழம் குறைந்த நீருக்குள்ளாக எமக்காக போராடிய வீரர்களின் உயிரற்ற உடல்களின் கால்களை பிடித்து சிங்களராணுவத்தினர் இழுத்து வரும் காட்சியை புகைப்படத்தில் காணும்போது இதயம் சுக்குநூறாக வெடிப்பது போலவே இருக்கிறது.     கண்கள் திறந்தபடியும், குத்திட்டபடியும் நிலைத்த பார்வையுடன் எமது விடுதலைப் போராளிகளின் உடல்கள் அந்தப் புகைப்படத் தொகுப்பில் நிறைந்து கிடந்தன.  அந்தக் காட்சிகள் எளிதில் மனதைவிட்டு போகப்போவதில்லை. இன்னும் மிக நீண்டகாலத்துக்கு [...]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

April 2011
M T W T F S S
    May »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Photo Gallery

Plugin from the creators of Brindes Personalizados :: More at Plulz Wordpress Plugins