காங்கிரசின் அடுத்த துரோகம் ஆரம்பம்
சிங்களஅரசு இந்திய அரசுக்கு வழங்கிய சில உறுதிமொழிகளை அடுத்து சிங்கள அரசுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக செய்திகள் கூறுகின்றன.
சிங்கள அரசு இந்திய அரசுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றினால் மகிந்தவுக்கு ஆதரவு கொடுப்பதாக மன்மோகன் சிங் அவர்கள் தொலைபோசியூடாக தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.
அதாவது போர் முடிவுற்ற பின்னர் இந்தியாவுக்கு வழங்கிய உறுதிமொழிகளே அவைகள்.
இராஜீவ் காந்தியோடு அமர்ந்து கையெழுத்திட்ட உறுதிமொழிகளையே சிங்கள அரசு அலட்சியம் செய்யும் போது வெறும் வாய் வார்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு சிங்கள அரசுக்கு ஆதரவு என்பது காங்கிரசின் துரோகத்தை மீண்டும் ஒருமுறை இப்போது பார்க்கப்போகின்றோம்.
சிங்களம் வழங்கிய உறுதிமொழிகளில் அதிகரப்பரவலாக்கமும் அடங்குமாம்.சில நாட்கள் முன்னர் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்டு காவல்த்துறை செயற்படத் தொடங்கினால் தன்னால் கூட பாதுகாப்பாக தமிழர் பகுதிகளுக்கு சென்றுவர முடியாது என மகிந்த குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விடயம் இப்படி இருக்கும் போது நான் மாட்டினால் உன்னையும் மாட்டிவிடுவேன் என்ற ரீதியிலேயே இந்தியா சிங்களத்திற்கு உதவு ஒப்புக்கொண்டிருக்கக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
எந்த விதத்திலும் சிங்கள அரசுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுக்கக் கூடாது என தமிழக தலைவர்கள் ஒருமித்த குரலில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழீழ புரட்சிகர மாணவர்கள் ஆகிய நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.










