Rste

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் – செய்தியாளர் மீதும் தாக்குதல்

yarl uniprotest2

யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற உதயன் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதுடன் அவரின் ஒளிப்படக்கருவியும் சேதமாக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக் கழகத்தில் மாணவர் ஒன்றியத் தலைவராக நியமிப்பதற்காக தற்போதைய தலைவரை பல்கலைக்கழகத்திலிருந்து துணைவேந்தர் நீக்கியுள்ளார். அதனை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அச் செய்தியாளர் செய்தி சேகரித்து கொண்டிருந்தபொழுது அங்கே கூடியிருந்தவர்களில் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரது கையில் இருந்த ஒளிப்படக் கருவியும் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டதுடன் ஒளிப்படக்கருவியின் மெமறி சிப் பறிக்கப்ட்டுள்ளது. [...]

நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பெரும்பான்மை கட்சிகள் குழம்பிப்போய் கிடக்கின்றன  -  மனோ கணேசன்

mano

ஜநா செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஆளுங்கூட்டணி கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி ஆகிய அனைத்து தென்னிலங்கை பெரும்பான்மை கட்சிகளும் பெரிதும் குழப்பமடைந்து கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முன்னணியின் பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரனின் ஏற்பாட்டில் பாமன்கடை பணிமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற கொழும்பு மேற்கு தொகுதியின் ஜமமு செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,     எதிர்வரும் மே [...]

விடுதலைப்புலிகள் ஒழுக்கமானவர்கள் ஜ.நா அறிக்கை – ஏற்கமாட்டோம் என்கிறது சிங்களம்

ltte

தமிழீழ விடுதலைப்புலிகளைச் சுதந்திரப் போராளிகள் என்றும் உலகத்திலேயே ஒழுக்கமானவர்கள் என்றும் தெரிவித்துள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் தருஸ்மன் அறிக்கையை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது? இப்படி அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று கேள்வி எழுப்பினார்.   அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பான அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என     செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் [...]

தாய்லாந்து- கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

thai-cambodian-foriegn-ministers1

தாய்லாந்து- கம்போடியா இடையே கடந்த ஒரு வார காலமாக நிலவி வந்த தற்காலிக போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.   இது குறித்து கம்போடிய அரசு செய்தி தொடர்பாளர் பெய்ஷிப்ஹான் தெரிவிக்கையில், தாய்லாந்து- கம்போடிய எல்லையில் உள்ள போனோபெம் டான்கிராக் பகுதியில் பழ‌மையான கோயிலை ஆக்கிரமிப்பதில் கடந்த வியாழக்கிழமை முதல் சண்டை ஏற்பட்டு வந்தது.   உள்நாடடு அரசியல் காரணங்களுக்காக இந்த சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் இரு தரப்பிலும் சுமார் 40 நிமிடங்கள் நடந்த பேச்சுவார்த்தையின் படி [...]

இந்தியா முழுவதும் 60க்கும் மேற்பட்ட விமான போக்குவரத்துக்கள் ரத்து

airindiastrike

ஏர்-இந்தியா விமான பைலட்கள் ஸ்டிரைக் இரண்டாம் நாளாக நேற்றும் தொடர்ந்தது. பைலட்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. நேற்று 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.   சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும். ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி சம்பள உயர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏர்-இந்தியா விமான பைலட்கள் நேற்று முன்தினம் திடீர் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால், நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டது. 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து [...]

காங்கிரசின் அடுத்த துரோகம் ஆரம்பம்

mahinda&singh

சிங்களஅரசு இந்திய அரசுக்கு வழங்கிய சில உறுதிமொழிகளை அடுத்து சிங்கள அரசுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக செய்திகள் கூறுகின்றன. சிங்கள அரசு இந்திய அரசுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றினால் மகிந்தவுக்கு ஆதரவு கொடுப்பதாக மன்மோகன் சிங் அவர்கள் தொலைபோசியூடாக தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதாவது போர் முடிவுற்ற பின்னர் இந்தியாவுக்கு வழங்கிய உறுதிமொழிகளே அவைகள். இராஜீவ் காந்தியோடு அமர்ந்து கையெழுத்திட்ட உறுதிமொழிகளையே சிங்கள அரசு அலட்சியம் செய்யும் போது வெறும் வாய் வார்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு சிங்கள அரசுக்கு [...]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

April 2011
M T W T F S S
    May »
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Photo Gallery

Plugin from the creators of Brindes Personalizados :: More at Plulz Wordpress Plugins