Rste

எமது நோக்கம்

தமிழீழம் எமது தமிழ் மக்களின் தேசம்.

எமது மண் சிங்கள பேரினவாத அரசால் இப்போது முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பும் கொலைகளும், பாலியல் பலாத்காரங்களும் சிறைச்சேதமும் சிங்கள பேரினவாத அரச இராணுவத்தால் தொடர்ந்தும் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

உலகின் எந்த ஒரு இனமும் கண்டிராத துயரையும் இழப்பையும் எமது தேசமும் மக்களும் கண்டிருக்கிறார்கள்.40ஆயிரத்திற்கும் நெருக்கமான எமது தேசத்தின் விடுதலையை நெஞ்சினில் சுமந்த மாவீரர்கள் விதையாகிப்போனார்கள்.

அளப்பரிய அர்ப்பணிப்புக்களைப் புரிந்த இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்கள் தம் இன்னுயிர்களை இழந்து புதைகுழியினில் சிங்கள பேரினவாத அரசால் புதைக்கப்பட்டார்கள்.

தாம் நேசித்த தாயை, தந்தையை. சகோதரனை, சகோதரியை, கணவனை, பிள்ளைகளை இழந்த இலட்சக்கனக்கான எமது உறவுகள் இன்றும் சொல்லெனாத் துயரினில் இன்றும் நடைபிணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பிறந்த நாள் முதல் துயரையும் இழப்பையும் மட்டுமே கானும் சபிக்கப்பட்ட இனமாக தமிழினத்தை துரோகிகளோடு இணைந்து சிங்கள பேரினவாத அரசு மாற்றிவிட்டது. தேசத்தை இழந்தோம் மாவீர்களை இழந்தோம் மக்களை இழந்தோம் உடமை இழந்தோம் கடைசியில் உரிமையும் இழந்தோம். உறவுகளே இழந்தவைகளை மனதிற் பதித்து.

தமிழீழத்தின் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ஒருவரே என்றும் எம் தலைவர் என்பதையும்,

தமிழ் மக்களின் ஏகோபித்த அபிலாசை தனித்தமிழீழமே.

அக்கொள்கையில் பற்றுறிதியுடனிருக்கும், தமிழீழ விடுதலைப்ப்லிகளே தமிழீழமக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பதையும்,

சுதந்திர தனித் தமிழீழமே தமிழ் மக்களுக்கான தீர்வு என்பதையும் ஏற்று,

எமது தேசிய கொடியின் கீழ் அணிதிரண்டு தம் இன்னுயிர்களையும் ஈகம் செய்த மாவீரர்களின் தியாகத்தையும்,

அளப்பரிய அர்ப்பணிப்புகளையும் செய்த மக்களையும் மனதில் நிறுத்தி,

தமிழீழத்தின் விடுதலைக்காய் சிதறிக்கிடக்கும் மாணவர்களையும்.இளையோர்களையும், முழு வீச்சோடு இணைத்து எமது விடுதலைப் போராட்டத்தை புதிய வடிவங்களில் முன்னெடுத்துச் செல்வோம்..

தமிழீழ வரலாற்றினையும், மாவீரர்களுடைய உன்னத தியாகங்களையும், எம் இளைய சந்ததியினருக்கு தெளிவு படுத்தி அதற்கேற்ப வரலாற்று பணியாற்றுவோம்..

தினம் தினம் நம் உறவுகளை கொன்று குவித்த சிங்கள இனவாத அரசினையும் அதற்க்கு உந்துசக்தியாய் திகழ்ந்த நாடுகளையும் சர்வதேச மன்றதில் நிறுத்தப் பாடுபடுவோம்.

இழந்த தேசத்தை மீட்டு உரிமைக்கு உயிர்கொடுத்து எமது தேசத்தின் கொடியேந்தி எமது மாவீரர்களின் கனவும் எமது மக்களின் கனவும் நிறைவேறும்வரை எமது உயிரையும் இழக்கும்வரை போராடுவோம்.

இந்த தலைமுறையே தமிழீழத்தை கானச்செய்ய அயராது எவ்வித இடர்கள் வரினும் விலைபோகாத எமது மாவீரர்களின் வழி நின்று எமது தேசியத்தலைவரின் சிந்தனையின் வழியில் பயணித்து தேசத்தின் விடிவிற்காகவும் மக்களுக்காகவும் உழைப்போம் என உறுதியெடுக்கின்றோம்.. இதுவே எமது நோக்கமுமாகும்.

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google

 

May 2012
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Photo Gallery

Plugin from the creators of Brindes Personalizados :: More at Plulz Wordpress Plugins